twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாட்டு மாடுகள் பற்றி சிறப்பா பேசுன ஆரி.. ஜல்லிக்கட்டு போராட்டத்தை கையில் எடுத்த ரம்யா பாண்டியன்!

    |

    சென்னை: விஜயதசமி ஸ்பெஷல் பிக் பாஸ் ஷோ நேற்று தொடர்ந்து 4 மணி நேரம் ஒளிபரப்பானது.

    மாலை 6.30 மணிக்கு தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி, இரவு 10.30 மணிக்கு நிறைவு பெற்றது.

    கொலு, ஆயுத பூஜை, விஜயதசமி என களை கட்டியது பிக் பாஸ் வீடு. ஆடல், பாடல், விளையாட்டு, பேச்சு போட்டி, பாட்டுப் போட்டி என இரவு வரை ஒரே கொண்டாட்டம் தான்.

    இந்த அர்ச்சனா போடுற சீன் இருக்கே.. எவிக்‌ஷன் லிஸ்ட்லயே இல்லை.. இவங்க வெளிய போறாங்களாம்!இந்த அர்ச்சனா போடுற சீன் இருக்கே.. எவிக்‌ஷன் லிஸ்ட்லயே இல்லை.. இவங்க வெளிய போறாங்களாம்!

    நாட்டு மாடுகள்

    நாட்டு மாடுகள்

    போரிங் போட்டியாளர் என பெயர் எடுத்து ஜெயிலுக்கு எல்லாம் போயிட்டு வந்த நம்ம நெடுஞ்சாலை ஹீரோ ஆரி அர்ஜுனா, நேற்று கிராமத்து அணியினர் டீம் சார்பாக கிராமமே சிறந்தது என்கிற தலைப்பில் அழகாகவும் ஆழமாகவும் பேசினார். நாட்டு மாடுகளை வளர்ப்பதன் அவசியம் மற்றும் உலகிலே இல்லாத அளவுக்கு தரமான நாட்டு மாடுகள் நம்ம நாட்டில் தான் இருக்கின்றன. அவற்றை பேணி காக்கும் கிராம மக்களுக்கு ராயல் சல்யூட் அடித்தார்.

    நாட்டின் முதுகெலும்பு கிராமம்

    நாட்டின் முதுகெலும்பு கிராமம்

    வழக்கம் போல சிரித்த முகத்துடன் பேச வந்த ரம்யா பாண்டியன், நான் நகரத்து டீம்ல இருந்தாலும், இங்க இருக்க பல பேரோட பூர்விகம் கிராமம் தான். அந்த கிராமத்து நல்ல விஷயங்கள் மாறாம அப்படியே இங்கேயும் பின் பற்றி வருகிறோம் என்றார். நாட்டின் முதுகெலும்பு கிராமம் என ஆரி சொன்னார் அது 100 சதவீதம் உண்மை என பேசிய ரம்யா, அப்படியே நகரத்து பெருமையை பேச ஆரம்பித்தார்.

    விசிலடித்த வேல்முருகன்

    விசிலடித்த வேல்முருகன்

    என்னதான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தாலும், அவங்களாம் வேலைக்கு போகணும்னு ஆசைப்படுறது நகரத்துல தான். அதை எல்லாரும் ஒத்துக்கிட்டே ஆகணும். இங்க இருக்க பல பேர் கிராமத்துல இருந்து நகரத்துக்கு வேலைக்காக வந்தவங்க தான் என்றதும், பாடகர் வேல்முருகன் விசிலடித்து பாராட்டினார்.

    ஜல்லிக்கட்டு போராட்டம்

    ஜல்லிக்கட்டு போராட்டம்

    கிராமத்துக்கு ஒரு பிரச்சனைனா நகரத்து மக்கள் அப்படியே கண்டுக்காம விடுறதில்லை. மாட்டை பத்தி பேசுனாங்க.. நாம எல்லாருமே தான் நம்ம ஜல்லிக்கட்டுக்கு போராடி அதுக்கு வெற்றியும் வாங்கி கொடுத்தோம் என ரம்யா சொன்னதும், சோம்ஸ், பாலாஜி என எல்லாரும் விசில் அடித்து ஆரவாரம் பண்ணாங்க..

    நகரத்து மாட்டு வாண்டி

    நகரத்து மாட்டு வாண்டி

    மாட்டு வண்டியில போகுற சுகத்தை பத்தி ஆரி பேசுனாங்க, அப்போ எனக்கு டக்குன்னு தோன்றியது ஆட்டோ தான். நகரத்து மாட்டு வண்டி ஆட்டோ தான். ஆட்டோக்காரங்க பத்தி நான் புதுசா சொல்லத் தேவையில்லை அதை பாட்ஷா படத்துலயே சூப்பர் ஸ்டார் பாட்டா பாடிட்டார் என ஆயுத பூஜையையும் ஆட்டோக்காரர்களையும் மறக்காமல் பேசி கை தட்டு மட்டும் இல்லைங்க இந்த வாரம் ஓட்டையும் ரம்யா அள்ளிட்டு வராங்க..

    விஜயதசமி சரவெடி

    விஜயதசமி சரவெடி

    நகரத்துல வேலை செய்றவங்களுக்கு சமூதாயத்தின் மேல அக்கறை இல்லைன்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கு.. ஆனால், அதை நான் ஏற்கமாட்டேன்.. வேலைல பிசியா இருந்தாலும், சமூக பிரச்சனைகளை சோஷியல் மீடியாவில் டிரெண்ட் செய்து, எத்தனையோ பிரச்சனைகளுக்கு நீதியும் வாங்கிக் கொடுத்துருக்கோம் என்ற உடன் அதுவரை கை தட்ட வேண்டாம் என எல்லோரையும் அடக்கி வைத்திருந்த பாலா.. அனைவரையும் ஆராவாரம் செய்யத் தூண்டினார். ரம்யாவின் பேச்சு விஜயதசமி சரவெடி!

    English summary
    After Aari Arjuna talks about village life, Ramya Pandian talks about Jallikattu protest and praise city life is best in Bigg Boss house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X