நிர்வாண போட்டோ வெளியிட்ட துஷ்டர்கள்.. சுதாரித்துக்கொண்ட பிரபல நடிகை.. சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு!
தனது பெயரில் போலி டிவிட்டர் கணக்கு ஆரம்பித்து மோசடி செய்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக நடிகை ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தனது பெயரில் போலி டிவிட்டர் கணக்கு ஆரம்பித்து நிர்வாண புகைப்படங்களை பதிவிட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக நடிகை ரம்யா பாண்டியன் எச்சரித்துள்ளார்.
ஜோக்கர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். நல்ல நடிகை என பெயர் எடுத்தாலும், அவருக்கு சரியாக பட வாயப்புகள் அமையவில்லை.

பட வாய்ப்பை பெறுவதற்காக ரம்யா நடத்திய புடவை போட்டோ ஷூட் இணையத்தையே ஆட்டிப்படைத்தது. அதன் பிறகு சாரி போட்டோ ஷூட் தான் அகில இந்திய டிரெண்டிங்காகிவிட்டது. கோலிவுட், பாலிவுட், மல்லுவுட் என எல்லா உட் நடிகைகளும் சாரி போட்டோக்களை தவறாமல்பதிவிட்டு வருகின்றனர்.
'
இந்நிலையில் ரம்யா பாண்டியன் பெயரில் போலியாக ஆரம்பிக்கப்பட்ட டிவிட்டர் கணக்கு ஒன்றில் இருந்து, சில நிர்வாணப் புடைப்படங்கள், மோசமான பதிவிகள் வெளியிடப்பட்டன. இதுகுறித்து ரம்யாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
உடனடியாக சுதாரித்துக்கொண்ட ரம்யா, தனது ஒரிஜினல் அக்கவுண்ட எது என்பதை வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டுள்ளார். மேலும் போலி கணக்கு ஆரம்பித்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











