அரை நிர்வாணமாக அப்படியொரு கோலத்தில் போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்.. கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: பிக் பாஸ் மூலம் பிரபலமான ரம்யா பாண்டியன் அரை நிர்வாணமாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.
கவர்ச்சி போட்டோக்களை போட்டு இன்ஸ்டாகிராம் மூலமாகவே சினிமா மற்றும் பிக் பாஸ் வாய்ப்புகளை கவர்ந்தார் ரம்யா பாண்டியன் என விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆடையே அணியாமல் அடுத்த லெவல் போட்டோஷூட் ஒன்றை நடத்தியிருக்கிறார்.
ஒரே ஒரு ரோஜாப் பூவை மட்டுமே வைத்துக் கொண்டு அழகு பொங்கும் அசத்தல் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார்.

ஜோக்கர் ஹீரோயின்
டம்மி டப்பாசு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். நடிகர் அருண் பாண்டியனின் சகோதரரின் மகளான இவர் ரொம்பவே கஷ்டப்பட்டு சினிமாவுக்கு வந்தவர் என அவரே பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது தனது சோகக் கதையை கூறி ரசிகர்களை ஃபீல் செய்ய வைத்திருந்தார். குரு சோமசுந்தரம் நடிப்பில் ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அடுத்ததாக சமுத்திரகனியின் ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார்.

குக் வித் கோமாளி டு பிக் பாஸ்
பட வாய்ப்புகள் கிடைத்தாலும் பெரியளவில் தனக்கான பெயரோ புகழோ கிடைக்கவில்லை என நினைத்திருந்த ரம்யா பாண்டியன் இடுப்பு போட்டோஷூட் நடத்திய நிலையில், விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி, பிக் பாஸ் என ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோ வாய்ப்புகளை பெற்றார். பிக் பாஸ் சீசன் 4 மற்றும் பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர்.

மம்மூட்டிக்கு ஜோடி
சூர்யா தயாரிப்பில் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்த ரம்யா பாண்டியன் சமீபத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தார். மேலும், சில படங்களிலும் ஓடிடி வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார் ரம்யா பாண்டியன்.

அரை நிர்வாணமாக
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் ஒற்றை ரோஜாவை கையில் வைத்துக் கொண்டு ஆடை அணியாமல் அரை நிர்வாணமாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார் ரம்யா பாண்டியன்.

உச்சகட்ட கவர்ச்சி
ஏற்கனவே கருப்பு நிற உள்ளாடை மற்றும் வெள்ளை நிற உள்ளாடைகளை அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்து அதிர வைத்து வந்த ரம்யா பாண்டியன் தற்போது மேலாடை அணியாமல் போல்டாக போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை பதிவிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார்.


Click it and Unblock the Notifications











