லைட் ஆஃப் பண்ண பிறகும் அழுத ஷிவானி.. விடாமல் ஆறுதல் சொன்ன ரம்யா பாண்டியன்.. பக்கமே வராத பயில்வான்!

சென்னை: ஷிவானி அம்மா பேசிய பேச்சைக் கேட்டு யாருமே அந்த பக்கம் வரவே இல்லை.

Recommended Video

சென்னை: கண்ணீர்விட்டே பஞ்சரான பயில்வான் பாலா.. கண்டு கொள்ளாத ஷிவானி அம்மா..!

ஆனால், அப்போதும் அழுது கொண்டிருந்த ஷிவானிக்கு ஆறுதல் சொன்னது ரம்யா பாண்டியன் மட்டும் தான்.

இரவு நேரத்தில் பிக்பாஸ் விளக்குகளை அணைத்த பிறகும் அழுகையை தொடர்ந்த ஷிவானிக்கு ரம்யா கூடவே இருந்து ஆறுதல் சொல்லி ரசிகர்கள் மனங்களை கவர்ந்து விட்டார்.

லவ் டிராக்

லவ் டிராக்

இந்த சீசனில் துரத்தி துரத்தி காதல் செய்ய யாருமே கிடைக்காத நிலையில், பாலாவுக்கும் ஷிவானிக்கும் லவ் டிராக்கை ஆரம்பித்து வைத்தனர். அது சரியில்லை, வேண்டாம், அடுத்தவர் பார்வைக்கு தப்பா தெரியுது என ஆரியும் ரம்யா பாண்டியனும் ஆரம்பத்தில் இருந்தே அது பற்றி பேசி வந்தது குறிப்பிடத்தக்கது.

கண்டித்த அர்ச்சனா

கண்டித்த அர்ச்சனா

பெண் குழந்தையை வைத்திருக்கும் அர்ச்சனா இருக்கும் போது, பாலா நீ செய்வது சரி கிடையாது. இது வெளியில் வேறு மாதிரி தெரியும், அந்த பெண்ணை பாதிக்கும் என எடுத்துச் சொல்லும் போதெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் அர்ச்சனாவிடம் கோபப்பட்டு ஷிவானியிடம் இதை பற்றி கிண்டலாக பேசி சிரித்தார் பாலா.

தூண்டிவிட்ட சம்யுக்தா

தூண்டிவிட்ட சம்யுக்தா

அர்ச்சனா கண்டித்த அளவுக்கு கூடவே இருந்த சம்யுக்தா கண்டித்து இருந்தால், பாலாவும் ஷிவானியும் அப்பவே தனித் தனியாக பிரிந்து விளையாட ஆரம்பித்து இருப்பார்கள். பாலாவை கொஞ்சம் கொஞ்சமாக உசுப்பேற்றி விட்டதும், பாலாவுக்கும் ஷிவானிக்கும் பாலமாக இருந்தும் சம்யுக்தா செயல்பட்டதால் தான் இந்த பிரச்சனையே என நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பாலா மாமான்னு சுத்துறா

பாலா மாமான்னு சுத்துறா

அப்பவே ஷிவானி நாராயணன் பாலாவிடம் நெருங்கி பழகுவதை ரம்யா பாண்டியன் நேரடியாகவே பாலா மாமா.. பாலா மாமான்னு சுத்துறதை தவிர வேறு என்ன பண்றீங்க என நேரடியாகவே கலாய்த்தார். மேலும், பாலா கண்ணாடி சிறைக்குள் சென்ற போது, இன்னைக்கு ஒரு நாள் எங்க கூட பேசுங்க எனவும் பங்கம் செய்தார்.

இப்போ அழுது என்ன பிரயோஜனம்

இப்போ அழுது என்ன பிரயோஜனம்

அர்ச்சனா, ஆரி, ரம்யா சொல்லும் போதெல்லாம் கேட்காமல் பாலாவும் ஷிவானியும் சிரித்து விட்டு, அண்ணன் தங்கையாக இருக்கிறோம் என கொச்சைப்படுத்தி விட்டு பேசி வந்த நிலையில், இப்போ ஷிவானி அம்மாவே வந்து, அவனுக்கு காலையில எந்திரிக்க தெரியாதா? நீ தான் போய் எழுப்பணுமா? ஏன் அவன் பின்னாடியே சுத்துற என வார்த்தைக்கு வார்த்தை டி போட்டு திட்டியை கேட்டு இப்போ அழுது என்ன பிரயோஜனம்.

பதுங்கிய பயில்வான்

பதுங்கிய பயில்வான்

ஷிவானி அம்மா தனது ஆதங்கத்தை கொட்டும் போது, ஒரு வார்த்தை கூட, அப்படியெல்லாம் இல்லை அம்மா.. நாங்க சும்மா நட்பா தான் பழகினோம்.. டிவியில எப்படி காட்டினாங்க என தெரியவில்லை. ஷிவானியை திட்டாதீங்கன்னு ஒரு வார்த்தை கூட சொல்லாமல், கமல் சார் எபிசோடில் எப்படி பேய் அறைந்தது போல இருந்தாரோ, அதே போல அந்த பக்கமே வராமல் பதுங்கி விட்டார் பாலாஜி முருகதாஸ்.

லைட் ஆஃப் பண்ண பிறகும்

லைட் ஆஃப் பண்ண பிறகும்

ஷிவானி நாராயணின் அம்மா போன பிறகு சோகமாக இருந்த பாலா, அவருடைய அண்ணன் ரமேஷ் வந்ததும் ஹேப்பியாகி விட்டார். ஷிவானியும், தனியாக உட்கார்ந்து சோகமாக இல்லாமல், கண்களை துடைத்துக் கொண்டு அவர் முன்பு வந்து நின்றார். அவர் சென்ற பிறகு, லைட் ஆஃப் பண்ணி பிக் பாஸ் தூங்க சொன்ன நேரத்திலும் தனியா உட்கார்ந்து ஷிவானி மீண்டும் அழுகையை ஆரம்பித்தார்.

விடாமல் ஆறுதல் சொன்ன ரம்யா

விடாமல் ஆறுதல் சொன்ன ரம்யா

ஷிவானி அம்மா போன பிறகும் பாலா அவர் பக்கமே வந்து பேசவில்லை. கேபி கூட ஷிவானிக்கு எந்தவொரு ஆறுதலும் சொல்லவில்லை. அர்ச்சனா பாத்ரூம் ஏரியாவில் ஷிவானி அழும் போது அழைத்துப் பேசிய போது கூடவே சென்று ஆறுதல் சொன்ன ரம்யா, இப்போதும் ஷிவானிக்கு இரவு நேரத்திலும் ஆறுதல் சொல்லி, அம்மா தான சொன்னாங்க, கவலைப்படாத, நீ நல்லா விளையாடணும்னு தான் சொல்லிட்டு போயிருக்காங்க என மோட்டிவேட் செய்தது பாராட்டுக்குரியது. இந்த வாரம் சேவ் ஆக செம சான்ஸ்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X