ஆரியையும் பாலாவையும் பிக் பாஸ் கொஞ்ச வைத்தாலும்.. ரம்யாவுக்கு பிடிக்கலயாம்.. சண்டை போடணுமாம்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.

டைனிங் டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பாலாவை ஆரி கொஞ்சி விட்டு நகர, பிக் பாஸ் மீண்டும் அதை ரிப்பீட் செய்ய கட்டளை இட்டார்.

சமையல்கட்டிலிருந்து அதை பார்த்து பொறுக்க முடியாமல் ரம்யா இருவரையும் சண்டை போடுங்க என சொல்லும் காட்சிகள் புரமோவில் இடம்பெற்றுள்ளன.

ரம்யா வீட்டிலிருந்து

ரம்யா வீட்டிலிருந்து

இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரமோவில் ரம்யாவின் அம்மாவும் சகோதரரும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து ஏகப்பட்ட விஷயங்களை பேசினர். டபுள் எவிக்‌ஷன் நடந்தால், ரம்யா தான் இந்த வாரம் வெளியேறுவார் என்கிற ரேஞ்சுக்கு அவரது சகோதரர் பேசியது சமூக வலைதளத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ரியோவின் மனைவி

ரியோவின் மனைவி

இரண்டாவது புரமோவில் இன்றைய நிகழ்ச்சியில் ரியோவின் மனைவி உள்ளே வந்து உருகுவதும் பின்னர், ரம்யாவை ஏன் தூக்கி சுத்தினீங்க என்று கேட்டு வெளுப்பதுமாக செம சுவாரஸ்யமாக இன்றைய ஷோ இருக்கும் என தெரிகிறது. பாலாவுக்கு மிஸ் ஆன அடி ரியோவுக்கு கிடைக்குமா? என்று பார்ப்போம்.

பாலாவை கொஞ்சிய ஆரி

பாலாவை கொஞ்சிய ஆரி

இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது புரமோவில் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பாலாவை ஆரி கொஞ்சி விட்டு சென்ற நிலையில், பிக் பாஸ் உடனே ஆரி ரிப்பீட் என சொல்லி, மீண்டும் மீண்டும் பாலாவை கொஞ்ச வைத்தார். பாலா ஆர்மியினருக்கும், ஆரி ஆர்மியினருக்கும் கண் கொள்ளா காட்சியாக இருந்திருக்கும்.

ரம்யாவுக்கு பிடிக்கவில்லை

ரம்யாவுக்கு பிடிக்கவில்லை

ஆரி கொஞ்சி கொண்டே இருப்பதை பார்த்ததும் பாலாவுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. இதை பார்த்த ரம்யா பாண்டியன், இரண்டு சண்டை கோழிங்க கொஞ்சிட்டு இருக்காங்க.. ஆரி உங்களுக்கு பாலாவை கொஞ்சிறது பிடிக்குமா என்ன? தம்பி அப்படின்னு கொஞ்சுறீங்களா.. எனக்கு இது பார்க்க பிடிக்கல ப்ளீஸ் என பேசுவதை பார்த்து நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.

சண்டை போடுங்க

சண்டை போடுங்க

மேலும், இருவரையும் பார்த்து ரெண்டு பேரும் சண்டை போட்டுங்க என்றும் ரம்யா பேசியதை கேட்டதும், நரிப் பாண்டியனுக்கு எவ்வளவு வெஷம் பார்த்தீங்களா? என்று விளாசி வருகின்றனர். ரம்யா பாண்டியன் நல்லாவே சாஃப்ட் ஹர்ட் பண்றாரு, பாலாவையும் ஆரியையும் கோர்த்து விட்டு தான் எஸ்கேப் ஆக நினைக்கிறார். இந்த வாரம் நீ தான்மா வீட்டுக்கு போகப் போற என சொல்லி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X