உங்களுக்கு கேஸ் இருந்தா சொல்லுங்க சார்.. நான் வாதாடி தருகிறேன்.. கமலுக்கு ஆஜராக ஆசைப்பட்ட ரம்யா!
சென்னை: கோர்ட் டாஸ்க்கில் ரம்யாவும் ரியோவும் வக்கீல் வேலையை சிறப்பாக செய்ததாக பாராட்டினார் கமல்.
பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்டுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை போக்கும் வகையில் கடந்த வாரம் கோர்ட் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் ஜட்ஜாக சுச்சி செயல்பட்டார். அப்போது ஹவுஸ்மேட்ஸ்களுக்குள் இருந்த பிரச்சனைகள் புகார் மனுக்களாக கொடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.

பெரும் மோதல்
வழக்கு விசாரணையின் போதும் ஹவுஸ்மேட்ஸ் சண்டை போட்டுக் கொண்டனர். சில வழக்குகளால் பிக்பாஸ் வீட்டில் மீண்டும் பல சண்டைகள் உருவாயின. குறிப்பாக ஆரிக்கும் சம்யுக்தாவுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது.

கையை தூக்க சொல்லி
நேற்றைய எபிசோடில் தறுதலை விவகாரம் குறித்து விசாரித்தார் கமல். இந்நிலையில் இன்றைய எபிசோடில் கோர்ட் டாஸ்க் குறித்து பேசினார். அப்போது சுச்சி, கைகளை தூக்க சொல்லி மெஜாரிட்டிப்படி தீர்ப்பு வழங்கியதை விசாரித்தார்.

சம்யுக்தாவால் குழப்பம்
அவரது தீர்ப்பு ஒருதலை பட்சமாக இருந்தது போல் தோன்றியதாக கூறினார். தொடர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தி மீதான கேபியின் வழக்கை விசாரித்தார். அப்போது சம்யுக்தாவால் ஏற்பட்ட குழப்பம் குறித்தும் பேசப்பட்டது.

வாதாடிக் கொடுக்கிறேன்
அதன்பிறகு சிறப்பான வக்கீலாக இருந்ததாக கூறி ரம்யா பாண்டியனுக்கும் ரியோவுக்கும் பாராட்டு தெரிவித்தார். அப்போது பேசிய ரம்யா பாண்டியன், உங்களுக்கு ஏதாவது கேஸ் இருந்தால் சொல்லுங்கள் சார் நான் வந்து வாதாடிக் கொடுக்கிறேன் என்றார்.

எங்கள் வீட்டில் இருக்கிறார்கள்
அதற்கு பதிலளித்த கமல் எங்கள் வீட்டிலேயே ஏகப்பட்ட லாயர்கள் இருக்கிறார்கள். அந்த எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். மேலும் கேஸ் எதுவும் வரக்கூடாது என்றே விரும்புகிறோம் என்றார் கமல். தொடர்ந்து ரியோ குறித்து பேசிய கமல், ரியோ நல்லா பேச ஆரம்பித்துவிட்டார் என பாராட்டு தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











