அவர் இனிமே என் மாமா.. தங்கச்சி திருமணத்தில் பிக் பாஸ் ரம்யா பாண்டியன் பண்ண தரமான சம்பவம்!

சென்னை: பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான ரம்யா பாண்டியன் தனது தங்கை கீர்த்தி பாண்டியன் திருமணத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வெல்கம் மாப்பிள்ளை என அசோக் செல்வனை தங்கள் குடும்பத்துக்கு வரவேற்றுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அருண் பாண்டியனின் மகள் தான் கீர்த்தி பாண்டியன். பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் ப்ளூ ஸ்டார் படத்தில் நடிகர் அசோக் செல்வன் உடன் இணைந்து நடித்த நிலையில் இருவரும் காதலிக்க ஆரம்பித்து படம் வெளியாவதற்கு முன்பே திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவி ஆகிவிட்டனர்.

Ramya Pandian welcomes her sister Keerthi Pandian husband Ashok Selvan to her family

ஹீரோயின் கீர்த்தி பாண்டியன்: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் வெளியான அன்பிற்கினியாள் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி பாண்டியன்.

அசோக் செல்வன் திருமணம்: விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூதுகவ்வும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அசோக் செல்வன் அதன் பின்னர் பீட்சா 2, தெகிடி, சவாலே சமாளி, கூட்டத்தில் ஒருவன், ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம், போர் தொழில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Ramya Pandian welcomes her sister Keerthi Pandian husband Ashok Selvan to her family

விரைவில் அசோக் செல்வன் நடிப்பில் ப்ளூ ஸ்டார் திரைப்படம் ரிலீசாக உள்ளது. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி பாண்டியனுடன் ஏற்பட்ட காதல் தற்போது திருமணமாக மாறியுள்ளது.

அசோக் செல்வனை வரவேற்ற ரம்யா பாண்டியன்: நடிகர் அருண் பாண்டியனின் சகோதரரின் மகளான ரம்யா பாண்டியன் தனது தங்கை கீர்த்தி பாண்டியன் திருமணத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு மாப்பிள்ளை அசோக் செல்வனை தங்கள் குடும்பத்திற்கு வரவேற்றுள்ளார்.

Ramya Pandian welcomes her sister Keerthi Pandian husband Ashok Selvan to her family

ரம்யா பாண்டியன் திருமணம் எப்போ?: அந்த புகைப்படங்களை பார்த்த பிக் பாஸ் ரம்யா பாண்டியனின் ரசிகர்கள் 33 வயதாகும் ரம்யா பாண்டியனுக்கு எப்போது திருமணம் என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல திரைப்படங்களில் முன்னணி நடிகையாக ரம்யா பாண்டியன் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், இப்போதைக்கு திருமண பேச்சுக்கள் நடக்காது என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X