காலையில் எழுந்து முகத்தை கழுவாமல் செல்பி.. அழகு ராணியே என வர்ணித்த ரசிகர்கள்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு ஆதரவாக இருக்கும் ரசிகர்களுக்கு இணையாக பலராலும் விமர்சிக்கப் பட்டவர்.
இடுப்பழகைக் காட்டி மொட்டை மாடி போட்டோ ஷூட்டின் மூலம் பிரபலமடைந்த ரம்யா பாண்டியன் இப்போது காலையில் எழுந்து முகத்தை கழுவாமல் எடுத்த செல்பி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டும் உள்ளார்.

பக்காவாக ஸ்கெட்ச் போட்டு
டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன் அதைத் தொடர்ந்து ஆண்தேவதை மற்றும் ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அந்த படங்களின் மூலம் ரசிகர்களை கவர முடியவில்லை என்பதால் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு போட்டோ ஷூட் நடத்தி ஓவர் நைட்டில் ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவின் குயினாக மாறினார்.

குக் வித் கோமாளி
இடுப்பை காட்டி எடுத்த மொட்டைமாடி போட்டோ ஷூட் நினைத்ததை விட வைரலானது. தொடர்ந்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வர விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளியில் அதிரடியாக இறங்கி பட்டையைக் கிளப்பிய தோடு பலகோடி ரசிகர்களையும் பெற்றார்.

பாராட்டுகளையும் பெற்றார்
குக் வித் கோமாளியை தொடர்ந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி மிகச் சிறப்பாக விளையாடி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பாராட்டுக்களுக்கு இணையாக எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

அழகு ராணியே
சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க ரம்யா பாண்டியன் ஒப்பந்தமாகி இருக்க அதன் படப்பிடிப்பு பூஜையுடன் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. எப்பொழுதும் அளவான மேக்கப்புடன் வந்து அசத்தி கொண்டிருந்த ரம்யா பாண்டியன் இப்பொழுது தூங்கி எழுந்த முகத்தை கழுவாமல் துளியும் மேக்கப் இல்லாமல் அப்படியே செல்பி எடுத்து போட்ட புகைப்படங்களுக்கு லைக்குகள் லட்சக்கணக்கில் குவிகிறது மேலும் இவரை ரசிகர்கள் அழகு ராணியே என வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











