ராணியாக மாறிய ரம்யா பாண்டியன்...வைரலாகும் வீடியோ
சென்னை : தமிழில் டம்மி டப்பாசு படத்தின் மூலம் நடிக்க வந்தவர் ரம்யா பாண்டியன். தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிறகு பட வாய்ப்புக்கள் இல்லாததால் விஜய் டிவி.,யில் பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக பங்கேற்றார்.

தற்போது பட வாய்ப்புக்கள் இல்லாததால் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தி, அந்த ஃபோட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
கடந்த வாரம் ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதால், அவர் ஓய்வில் இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் ரம்யா பாண்டியனுக்கு என்னாச்சு என கவலை அடைந்தனர். பிறகு விசாரித்ததில், அவருக்கு கண்ணில் லேசர் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ராணி போன்று உடையணிந்து ஃபோட்டோஷூட் நடத்திய அந்த வீடியோவுடன், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ராணி இருக்கிறாள் என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார்.
ரம்யா பாண்டியன் பதிவிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பதிவிட்ட ஒரு நிமிடத்தில் 5000 க்கும் அதிகமானவர்கள் லைக் செய்து, கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











