twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பத்திரிக்கையாளர்களின் பாராட்டு மழையில் "ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்" அரசியல் சாட்டையடி இந்த படம்!

    |

    சென்னை: சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்.

    ரம்யா பாண்டியன், வாணி போஜன் மிதுன் மாணிக்கம் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    பிரபல நடிகை மியா ஜார்ஜின் தந்தை காலமானார்.. திரைத்துறையினர் ரசிகர்கள் இரங்கல்! பிரபல நடிகை மியா ஜார்ஜின் தந்தை காலமானார்.. திரைத்துறையினர் ரசிகர்கள் இரங்கல்!

    வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் ஒரு அரசியல் சாட்டையடி என பத்திரிகையாளர்கள் பாராட்டி வருகின்றனர்.

    ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்

    ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்

    நடிகர் சூர்யா நடிப்பது மட்டுமல்லாமல் பல தரமான திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார் . அந்த வகையில் இப்போது ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் என்ற படத்தை தனது சொந்த நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார்.

    வெள்ளையன் கருப்பன்

    வெள்ளையன் கருப்பன்

    கிராமத்து கதைக் களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் வெள்ளையன் மற்றும் கருப்பன் என இரண்டு மாடுகளைப் பற்றிய படமாக உருவாகி உள்ளது. ரம்யா பாண்டியன் இதில் ஹீரோயினியாக நடிக்க அவருக்கு ஜோடியாக மிதுன் மாணிக்கம் நடித்துள்ளார் . ரம்யா பாண்டியன் மற்றும் மிதுன் மாணிக்கம் இருவரும் வெள்ளையன் மற்றும் கருப்பன் என இரண்டு மாடுகளை வளர்க்கின்றனர். அந்த மாடுகள் திடீரென்று ஒரு நாள் காணாமல் போக அதனை மீட்க இருவரும் எவ்வாறு போராடுகின்றனர் என்பதை அரசியல் சவுக்கடியுடன் இப்படத்தில் கூறப்பட்டுள்ளது.

    தெரிக்கவிடும் வசனங்களால்

    தெரிக்கவிடும் வசனங்களால்

    காட்சிக்கு காட்சி வசனங்களால் தெரிக்கவிடும் இப்படத்தில் கைத்தட்டல்கள் ஒவ்வொரு காட்சிக்கும் வரைமுறை இல்லாமல் கிடைக்கிறது. அறிமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இப்படத்தை இயக்கி இருக்க கிரிஷ் இசையமைத்துள்ளார். எம் சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிராமத்தை அப்படியே கண்முன் கொண்டுவந்து காட்டியது போல ஒவ்வொரு காட்சியும் மனதுக்குள் ஆழமாகப் பதிகிறது.

    சீமான் வேடம்

    சீமான் வேடம்

    மேலும் இதில் நடிகை வாணி போஜன் ரிப்போர்ட்டராக வந்து தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சிறப்பு தோற்றமாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேடமும் மற்றும் நடிகரும் இயக்குனருமான சீமான் வேடமும் தோன்றும் காட்சிகள் மிகப் பிரமாதமாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீமான் தோன்றும் காட்சிகள் கைத்தட்டல்களை வெகுவாக பெறுகிறது.

    பத்திரிக்கையாளர்களின் பாராட்டு மழையில்

    பத்திரிக்கையாளர்களின் பாராட்டு மழையில்

    ரம்யா பாண்டியனின் அசத்தலான நடிப்பு, மிதுன்னின் வெகுளித்தனமான நடிப்பு, துடி துடிப்புடன் வரும் வாணி போஜன் என அனைத்து கதாபாத்திரங்களும் இதில் சிறப்பாக அமைக்கப் பட்டிருக்க அரசியல் குறித்து மிக ஆழமாக பேசும் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் இப்பொழுது பத்திரிக்கையாளர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது. வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி அமேசான் தளத்தில் இப்படம் நேரடியாக வெளியாகிறது.

    English summary
    Ramya Pandiyan’s Rame Andalum Ravane Andalum Movie Praised by Journalists
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X