Just In
- 7 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 7 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 7 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 8 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பர்சனலா பேசியதை ஒட்டு கேட்டுட்டு பேசுறாரு.. ஆரி குறித்து குறை சொன்ன அனிதா.. பெட்ரோல் ஊற்றிய ரம்யா!
சென்னை: ஆரியை பற்றி தன்னிடம் குறை சொன்ன அனிதாவை மேலும் மேலும் தூண்டிவிட்டார் ரம்யா.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் அனிதா, சக போட்டியாளரான ஆரி தனது குடும்பத்தை பற்றி தவறாக பேசுவதாக காட்ட முயற்சி செய்தார்.
இதனால் ஆரியை பேச விடாமல் ஓவர் ரியாக்ட் பண்ணினார். நான் தவறாக பேச வரவில்லை, நான் சொல்வதை கேளுங்கள் என்று ஆரி சொன்ன போதும் விடாமல், மோசமான நடத்தையை வெளிப்படுத்தினார்.
உங்களை எந்த நேரத்திலும் தவறாக பேசவில்லை.. அனிதா குடும்பத்திடம் மன்னிப்பு கேட்ட ஆரி!

கேபி பிறந்தநாளில்..
தொடர்ந்து பெட்ரூமில் ரம்யாவிடம் ஆரி குறித்து பேசினார் அனிதா. அப்போது அர்ச்சனா அக்காவிடம் நான் பர்சனலாக பேசியதை பொது வெளியில் ஏன் கொண்டு வரணும். கேபி பிறந்த நாளில் அவர் குடும்பத்தை பார்த்ததும் எனக்கும் வீட்டுக்கு போகணும் போல இருக்கு என்று அழுதேன்.

கொலையா பண்ணிட்டேன்
எல்லாரையும் காயப்படுத்தி விட்டேன், வீட்டில் என்ன சொல்வார்களோ என்று கூறினேன். அதை போய் ஏத்துக்காம போகிறேன் என்று சொல்கிறார். ஏத்துக்காம போறதுக்கு கொலையா பண்ணிட்டேன், இல்ல பிக்பாஸ் வீட்டுல திருடிட்டேனா.

ஃபுல்லா தப்பா பேசுவாரு..
பிரபா பேரை எதுக்கு எடுக்கணும். என் புருஷன ஏன் பேசணும். இவரு முழுசா பேசின பிறகு கேட்டுட்டு பதில் சொல்லணுமாம். இவரு என் புருஷன பத்தி ஃபுல்லா தப்பா பேசுவாரு.. அது ஃபுல்லா டெலிகாஸ்ட் ஆகும், அப்புறம் என்ன பண்றது.

ஒட்டு கேட்டு பேசுறாரு
என் அப்பா அம்மாவ பத்தி ஏன் இங்க பேசணும். நான் அர்ச்சனா அக்காக்கிட்ட பர்சனலா பேசிட்டு இருந்தேன். அப்போது அவர் இங்கு இல்லவே இல்லை ஒட்டு கேட்டு வந்து பேசுறாரு என்று கூறினார் அனிதா.

பெட்ரோல் ஊற்றிய ரம்யா
ஏற்கனவே ஆரியை பிடிக்காத காரணத்தினால் அனிதா பேசியதற்கெல்லாம் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் அவரை இன்னும் இன்னும் தூண்டி விட்டுக்கொண்டிருந்தார் ரம்யா. அவரை நம்பாதீங்க என்றும் அனிதாவுக்கு தூபம் போட்டு விட்டார் ரம்யா.

விஷப்பூச்சி ரம்யா
இதனை பார்த்த ரசிகர்கள், பிக்பாஸ் வீட்டில் என்ன பர்சனல் இருக்கிறது என்று கேட்டுள்ளனர். மேலும் ரம்யாவை விஷ பாட்டில் விஷப்பூச்சி என்றும் கழுவி ஊற்றி வருகின்றனர். இதனிடையே தான் அர்ச்சனா அக்காவிடம் பர்சனலாக பேசியது, டிவியில் காட்டியிருக்க மாட்டார்கள் என்று கூறிய காட்சி வைரலாகி வருகிறது.