சினிமாவுக்கு குட்பை... இனி, புல் டைம் அரசியல் தான்: ரம்யா எம்.பி அறிவிப்பு

பெங்களூர்: தீவிர அரசியலில் இறங்குவதால் இனி, சினிமாவில் நடிக்க போவதில்லை என அறிவித்துள்ளார் நடிகையும், எம்.பியுமான ரம்யா.

குத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரம்யா. தனுஷ், சூர்யா உள்ளிட்டோருடன் நடித்த பிரபல நடிகையான இவர் சமீபத்தில் அரசியலில் இறங்கினார்.

மண்டியா தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக தேர்வான ரம்யா நாட்டின் இளம் எம்.பி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். வரவிருக்கும் லோக்சபா தேர்தலிலும் ரம்யா அதே தொகுதியில் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தற்போது தீவிர அரசியலில் களம் இறங்க வசதியாக, சினிமாப் படங்களில் நடிக்க போவதில்லை என அறிவித்துள்ளார் ரம்யா.

இது தொடர்பாக பெங்களூரில் செய்தியாளர்களிடம் ரம்யா கூறியதாவது :-

கடைசிப்படம்...

கடைசிப்படம்...

ஆர்யன் தான் எனது கடைசி படம். அரசியலில் இருந்து கொண்டு சினிமாவில் நடிக்க இயலவில்லை.

தொகுதி வளர்ச்சிக்காக...

தொகுதி வளர்ச்சிக்காக...

எனது தொகுதியில் வளர்ச்சி பணிகளை செய்து வருகிறேன். இதனால் சினிமாவில் நடிப்பதற்கு கஷ்டமாக உள்ளது. அதற்காக நான் சினிமாவை விட்டு விலகுவதாகவோ அல்லது ஓய்வு பெறுவதாகவோ கருத வேண்டாம்.

ஹீரோயினாக நடிக்க மாட்டேன்...

ஹீரோயினாக நடிக்க மாட்டேன்...

ஒரு வேளை வயதான பிறகு மீண்டும் சினிமாவுக்கு வரலாம். நடிகர் சிவராஜ்குமாரின் தங்கையாக நடிக்கலாம். ஆனால், கதாநாயகியாக நடிக்க ஒப்புக் கொள்ள மாட்டேன்.

ஆதரவு தாருங்கள் ரசிகர்களே....

ஆதரவு தாருங்கள் ரசிகர்களே....

எனது அரசியல் வாழ்க்கைக்கு ஆதரவு அளிக்கும்படி ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X