இது சாதாரண நடிப்பு இல்லடா சாமி.. கேலக்ஸி லெவல் நடிப்பு.. ரம்யாவை கழுவி ஊற்றிய பிரபல நடிகர்!

சென்னை: ஹவுஸ்மேட்ஸ்களிடையே மாற்றி மாற்றி பேசிய ரம்யா பாண்டியனை பிரபல நடிகர் கழுவி ஊற்றியுள்ளார்.

கடந்த சீசன் முதலே பிக்பாஸ் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து தனது கருத்துக்களை பதிவிட்டு வருபவர் நடிகர் சிவகுமார்.

கடந்த சீசனல் இவர் கணித்ததை போன்றே முகேன் டைட்டில் வின்னரானார். இந்நிலையில் இந்த சீசனையும் தொடர்ந்து ஃபாலோ பண்ணி வரும் சிவகுமார் தொடர்ந்து தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

ஆட்டம் முடியபோகுது தம்பி

ஆட்டம் முடியபோகுது தம்பி

அந்த வகையில் சுரேஷ் சக்கரவர்த்தியின் விளையாட்டை புகழ்ந்து தள்ளினார் சிவகுமார். ஃபைனல் வரை செல்ல தகுதியான போட்டியானர் சுரேஷ் சக்கரவர்த்தி என்று புகழ்ந்தார். அதேநேரத்தில் பாலாஜியின் அலப்பறைகளை பார்த்து உன் ஆட்டம் முடியப் போகுது தம்பி என்றும் எச்சரித்தார்.

போட்டியாளரா பிக்பாஸா?

போட்டியாளரா பிக்பாஸா?

மேலும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அர்ச்சனா, ஆங்கரை போல் நடந்து கொண்டதை பார்த்த பாலாஜி, அர்ச்சனா போட்டியாளரா அல்லது பிக்பாஸா என்று கேட்டு பங்கம் பண்ணினார். இப்படி ஒவ்வொரு நாள் எபிசோடையும் பார்த்து தனது கருத்தை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

ஆரிதான் போவார்

ஆரிதான் போவார்

அந்த வகையில் தற்போது ரம்யா பாண்டியனை கழுவி ஊற்றியுள்ளார் சிவகுமார். அதாவது, அனிதாவிடம் ரகசியமாக பேசிய ரம்யா பாண்டியன், இந்த வாரம் ஆரிதான் வெளியே போவார் என்று நினைக்கிறேன். அதனால்தான் அவருக்கு ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் வவுச்சர் கொடுத்தார என்று கூறினார்.

அனிதாதான் போவார்

அனிதாதான் போவார்

பின்னர் கிட்சன் ஏரியாவில் இருந்த ரம்யாவிடம் யார் போவார் என்று நினைக்கிறீர்கள்? என்று கேட்டார் ஆரி. அதற்கு அனிதாதான் போவார் என்றார். ஆரி டபுள் எவிக்ஷனா இருக்குமா என்று கேட்ட போது அனிதா ஆஜித் போவார்கள் என்றார் ரம்யா.

கேபி போவார்

கேபி போவார்

பின்னர் ஆஜித்திடம் அமர்ந்து பேசும்போது கேபி போவாரா என்று கேட்டார். தொடர்ந்து ஆரி முதல் நபராய் சேவானதை பார்த்த அனிதா நான்தான் இந்த வாரம் எவிக்டாக போகிறேன். நிச்சயமா அதுதான், நான்தான் வெளியேற போகிறேன் என்று ரம்யாவிடம் கூறினார்.

இது என்ன வாய்?

இது என்ன வாய்?

அதைக் கேட்ட ரம்யா, அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று கூறினார். இப்படி எல்லோரிடமும் மாற்றி மாற்றி பேசி நடித்தார் ரம்யா. இதனை பார்த்த ரசிகர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று பேசுகிறதே.. இது என்ன வாய் என்று ரம்யாவை விளாசி வந்தனர்.

பயங்கரமான தியரி

இந்நிலையில் நடிகர் சிவகுமாரும் இதுகுறித்து டிவிட்டி ரம்யாவை கிழித்து விட்டுள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, அனிதாக்கிட்ட நைட் ரகசியமா ஒரு பயங்கரமான தியரி சொல்லி ஆரி எலிமினேட் ஆவாருன்னு சொன்னாங்க.. ஆரி கேட்கும் போது அனிதாதான் எலிமினேட் ஆவானு சொல்றாங்க.

கேலக்ஸி லெவல் நடிப்பு

கடைசியான அனிதா நிச்சயமா நான்தான் எலிமினேட்னு சொல்லும் போது.. நோ வேனு சொல்றாங்க.. இது சாதாரண நடிப்பு இல்லடா சாமி.. கேலக்ஸி லெவல் நடிப்பு.. கேலக்ஸி லெவல் என மரண பங்கம் செய்துள்ளார்.

விஷ பாட்டில்..

சிவகுமாரின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் ரம்யா டபுள் ஸ்டேண்டர்டு இல்ல.. ட்ரிப்பிள் ஸ்டேண்டர்டு என்று விளாசி வருகின்றனர். இன்னும் சிலர் இதுக்கு பேருதான் விஷ பாட்டில் என்றும் ரம்யாவை கழுவி ஊற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X