நீதான் ஸ்ட்ராங்கான கன்டெஸ்டன்ட்.. ஆனா இந்த வாரம்.. ரம்யாவின் தூக்கத்தை கெடுத்த துபாய் தம்பி!

சென்னை: தான்தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர் என்ற எண்ணத்துடன் விளையாடி வரும் ரம்யாவின் தூக்கத்தை கெடுத்துவிட்டார் அவரது துபாய் தம்பி.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ரம்யா பாண்டியன், ஆரம்பத்தில் ஸ்மார்ட் பிளேயர் என்ற பெயரை பெற்றார்.

இதனால் டைட்டிலை தட்டிச் செல்லும் வாய்ப்பு அவருக்கே அதிகம் என கூறி வந்தனர் ரசிகர்கள். ஆனால் நாளாக நாளாக அவரது சாயம் வெளுக்க தொடங்கிவிட்டது.

மற்றவர்களிடம் குறை

மற்றவர்களிடம் குறை

எல்லோரையும் பின்னால் பேசி வருகிறார் ரம்யா. குறிப்பாக ஆரியை கண்டால் ரம்யாவுக்கு ஆகவில்லை. வந்த நாள் முதலே அவரை நாமினேட் செய்து வருகிறார். போதா குறைக்கு மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் ஆரியை பற்றி தவறாக பேசி இன்ஃபுளுயன்ஸ் செய்து வருகிறார்.

கழுவி ஊற்றும் ரசிகர்கள்

கழுவி ஊற்றும் ரசிகர்கள்

கிடைக்கும் கேப்பில் எல்லாம் ஆரியை தவறாக காட்ட வேண்டும் என்று திட்டம் போட்டு, சம்பந்தம் இல்லாத இடத்திலும் ஆரி பற்றியே பேசி வருகிறார். இதனால் சமூக வலைதளங்களில் ரம்யாவை கண்டப்படி கழுவி ஊற்றி வருகின்றனர்.

விஷ பாட்டீல் ரம்யா

விஷ பாட்டீல் ரம்யா

மேலும் விஷப்பூச்சி, விஷ பாட்டில், பாய்சன் பாட்டில் என வாய்க்கு வந்தப்படி ரம்யாவை விளாசி வருகின்றனர். அதோடு இந்த வாரம் நாமினேஷனில் உள்ள ரம்யாவை வெளியேற்ற வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

ரகசியங்களை கூறிய தம்பி

ரகசியங்களை கூறிய தம்பி

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் நேற்று வந்த ரம்யாவின் தம்பி, ரம்யாவுக்கு பல ரகசியங்களை கூறி அவரது தூக்கத்தை கெடுத்து கனவில் மண்ணை அள்ளி போட்டுள்ளார். அதாவது, பெட்ரூமில் ரம்யாவிடம் சென்று பேசிய அவரது தம்பி பரசு, உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அதுக்காகதான் நான் இங்க வந்தேன் பேசலாமா என்றார்.

கடுமையான போட்டியாளர்

கடுமையான போட்டியாளர்

அதற்கு சொல்லுடா என்று வாஞ்சையுடன் கேட்டார் ரம்யா.
அப்போது பேசிய அவர், இந்த வீட்டில கேப்டனா இருந்திருக்க வைஸ் கேப்டனா இருந்திருக்க. எல்லா டாஸ்க்கையும் சிறப்பா செஞ்சுருக்க. கடுமையான போட்டியாளர்ன்னு ரெண்டு கன்டெஸ்டென்ஸ் உன் பெயரை சொல்லியிருக்காங்க.

எவிக்ட்டானால் நீ காரணமில்ல

எவிக்ட்டானால் நீ காரணமில்ல

நீ இதுவரைக்கும் இந்த வீட்டுல ஜெயிலுக்கு போனது இல்லை. நீதான் டிசர்விங் கன்டெஸ்டென்ட்ஸ். இந்த வாரம் ஒருவேலை சிங்கிள் எவிக்ஷன் அல்லது டபுள் எவிக்ஷன் நடந்து நீ எவிக்ட்டானால் அதற்கு காரணம் நீ காரணம் இல்ல என்றார்.

வெளியே போக வாய்ப்பிருக்கா?

வெளியே போக வாய்ப்பிருக்கா?

மேலும் என்னைக் கேட்டால் நீதான் ஸ்ட்ராங்கான கன்டெஸ்டென்ட்ஸ் என்று சொல்லுவேன். இதை நீ என் அக்கா என்பதற்காக சொல்லவில்லை என்றார். இதனைக் கேட்டு ஷாக்கான ரம்யா, அப்போ இந்த வாரம் வெளியே வர வாய்ப்பிருக்கா என்று கேட்டார்.

பின்னாடி பேசாதே

பின்னாடி பேசாதே

அதற்கு அதையெல்லாம் நான் சொல்ல முடியாது என்று நழுவினார். புறப்படும் முன்பாக வெளியில் சென்றும் அதையே திருப்பி சொன்னார். யாரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றாலும் அவர்களின் முகத்துக்கு நேராக சொல்லிவிடு என்றார்.

Recommended Video

போஸ்டரில் முழு கதையும் இருக்கு | MUSIC DIRECTOR GHIBRAN AND DIRECTOR DHILIP | FILMIBEAT TAMIL
மிரட்டிய துபாய் தம்பி

மிரட்டிய துபாய் தம்பி

இதனால் பதற்றமடைந்த ரம்யா, ஷிவானியிடமும் அதையே சொல்லி புலம்பினார். தான்தான் டைட்டில் வின்னர் என்ற நினைப்பில் இருந்த ரம்யாவை இந்த வார எவிக்ஷனை பற்றியெல்லாம் பேசி மிரட்டி விட்டுள்ளார் அவரது துபாய் தம்பி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X