கொளுத்திப்போட்ட சனம்.. நான் ஒன்னும் இங்க சமைக்க வரல.. ரியோவிடம் மல்லுக்கு நின்ற ரம்யா!

சென்னை: சனம் ஷெட்டி கொளுத்திப்போட்டதால் பற்றி எரிந்த ரம்யா பாண்டியன் வீட்டின் கேப்டனான ரியோவை வெளுத்துவிட்டார்.

பிக்பாஸ் வீட்டில் கால் செண்டர் டாஸ்க் கொடுத்தது முதலே அனல் பறந்து வருகிறது.

நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் கால் டாஸ்க்கில் பெரிதாக எதுவும் சண்டை வரவில்லை. ஆனால் அதன் பிறகு பற்றிக்கொண்டது.

டீமை மாற்றியது ஏன்?

டீமை மாற்றியது ஏன்?

ரம்யா பாண்டியன் டைனிங் ஏரியாவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியனிடம் குக்கிங் டீமில் இருந்து அனிதாவை மாத்தியது ஏன் கேபியை வயசு கேப்டனாக மாற்றியது ஏன் என்று தெரிந்தாக வேண்டும் என்றார்.

உன்னை மாற்றினாரா?

உன்னை மாற்றினாரா?

அதனைக் கேட்ட ரம்யா, அப்படியா உன்னை குக்கிங் டீமில் இருந்து மாற்றினாரா என்று அனிதாவிடம் கேட்டார். அதற்கு ஆமாம் என்று அனிதா சொல்ல, ஏன் மாற்றினார் என்று கேட்டார் ரம்யா.

கேள்வி கேட்ட ரம்யா

கேள்வி கேட்ட ரம்யா

அதற்கு குக்கிங் தெரியாதவர்களை டீமில் போட்டால்தான் ஆன் டைமுக்கு சாப்பாடு வரும் என்றார் என கூறினார் அனிதா. இதனைக் கேட்ட ரம்யா, ரியோவை அழைத்து ஏன் கிட்சன் டீமுக்கு மாற்றினீர்கள் என்றார்.

கட்டம் கட்டிய ரம்யா

கட்டம் கட்டிய ரம்யா

சமைக்க தெரியாதவங்கள கிட்சன் டீமில் போட்டார் ஆன் டைமுக்கு சாப்பாடு வரும் என்று எப்படி சொன்னீர்கள்? அது என்ன லாஜிக் என்று ரியோவை கட்டம் கட்டினார். அதற்கு பதில் சொன்ன ரியோ, சமைக்க தெரியாதவங்கள போட்டா கத்துப்பாங்க, உன்னை தனியா போடல அர்ச்சனாதான் ஹெல்ப் பண்றாங்களே என்றார்.

Recommended Video

Aari or Bala? Who is the hero | BIG BOSS TAMIL | Filmibeat Tamil
நான் சமைக்க வரல

நான் சமைக்க வரல

அர்ச்சனா ரெசிப்பி சொல்றாங்க.. நான் இல்லன்னு சொல்லல. நான் பிக்பாஸ் வீட்டுக்கு சமைக்க வரல. நீங்க என்னைக் கேட்டு முடிவு பண்ணல. முடிவு பண்ணிட்டு இன்ஃபார்ம் பண்ணீங்க என்று தாளித்து விட்டார் ரம்யா பாண்டியன். உன்கிட்ட கேட்கம முடிவு பண்ணதுக்கு மன்னிச்சுடு என்று சரண்டரானார் ரியோ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X