ஏன் என்னாச்சு இவருக்கு..? சோஷியல் மீடியாவுக்கு குட்டி பிரேக்... பிரபல நடிகை அதிரடி முடிவு!

By

சென்னை: பிரபல நடிகை, சோசியல் மீடியாவில் இருந்து குட்டி பிரேக் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Sayyesha Vs Ramya Pandian, Dance Challenge | Classical Vs Western

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் ரம்யா சுப்ரமணியன். இவர் இப்போது படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு, அபராஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்துகொண்டார் ரம்யா.

ஓ காதல் கண்மணி

ஓ காதல் கண்மணி

பிறகு 2015 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. பிறகு மங்காத்தா படத்தில் செய்தியாளராக நடித்த அவர், மணிரத்னம் இயக்கிய, ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். அடுத்து சூர்யா நடித்த மாசு என்கிற மாசிலாமணி, ஜெயம் ரவி, சாயிஷா நடித்த வனமகன், டாப்ஸி நடித்த கேம் ஓவர், அமலாபாலின் ஆடை படங்களில் நடித்திருந்தார்.

மாஸ்டர்

மாஸ்டர்

இப்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். லாக்டவுன் காரணமாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். அடிக்கடி ஒர்க் அவுட் உட்பட பல்வேறு புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.

குட்டி பிரேக்

குட்டி பிரேக்

மற்ற நடிகைகளை போல இவருக்கும் அதிகமான பாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில், லாக்டவுனின் கடைசி வாரமான இப்போது, சோசியல் மீடியாவில் இருந்து குட்டி பிரேக் எடுத்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். பயப்படவேண்டாம், நான் நன்றாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

போகாதீங்க

போகாதீங்க

இதையடுத்து ரசிகர்கள், அவரிடம் காரணம் கேட்டு வருகின்றனர். உண்மையான காரணத்தை சொல்லுங்களேன் என்றும், ஏன், இந்த பிரேக்? என்றும் நல்லா உற்சாகப்படுத்துவீங்களே, உங்களை மிஸ் பண்றோமே என்றும் கேட்டுள்ளனர். உங்க ஒர்க் அவுட் டிப்ஸ் வேணுமே என்றும் இந்த குட்டி பிரேக்ல கிடைச்ச அனுபவத்தை அப்புறமா ஷேர் பண்ணுங்க என்றும் சிலர் கூறியுள்ளனர்.

சென்று வா மகளே

சென்று வா மகளே

இன்னும் சிலர், எங்களை விட்டு போகாதீங்க என்றும், இப்படியும் ஒரு விளம்பரமா? என்றும் தெரிவித்துள்ளனர். சிலர், சென்று வா மகளே என்றும் நல்ல முடிவு என்றும் கலாய்த்துள்ளனர். வேறு சில ரசிகர்கள் உங்கள் வருகைக்கு காத்திருக்கிறோம், சீக்கிரம் வந்துருங்க என்றும் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X