பிகில் ஆடியோ லான்ச் ஹோஸ்ட் பண்ணது வீண் போகல.. ரம்யாக்கு அடிச்சது ஜாக்பாட்!
Recommended Video
சென்னை: விஜய் டிவி தொகுப்பாளினி மற்றும் நடிகை ரம்யா சுப்ரமணியம், தளபதி 64 படத்தில் இணைந்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியான பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரம்யா தொகுத்து வழங்கியிருந்தார்.
அந்த விழாவிலேயே ரம்யாவின் பெயரை குறிப்பிட்டு தளபதி விஜய் பேசியிருந்த நிலையில், தற்போது 'தளபதி 64' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரம்யா.
இத்தனை பேரா
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், கெளரி கிஷன், ஸ்ரீமன், சஞ்சீவ், பிரகிதா, ஸ்ரீநாத், பிரேம், சேத்தன், அழகன் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி (வைபவ்வின் சகோதரர்) என பல நட்சத்திரங்கள் 'தளபதி 64' படத்தில் நடித்து வருகின்றனர்.

ஆடியோ லான்ச்
அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான பிகில் திரைப்படம் 280 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளினியாக ரம்யா பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
ஹெல்பிங் மைண்ட்
தொகுப்பாளினி தானே என நடிகர் விஜய், ரம்யாவை நினைக்கவில்லை. விஜய் பேசிவிட்டு, அவரது மைக்கை அவரே தூக்கிக் கொண்டு சென்றார். ரம்யாவுக்கு அந்த வேலையை கொடுக்காமல் விஜய் செய்த செயலை விஜய் ரசிகர்கள் பாராட்டியிருந்தனர்.

ஏன் இத்தனை பேர்
தளபதி விஜய் படங்கள் என்றாலே, தற்போது நடிகர்கள் பட்டாளம் குவிவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. ஆனால், கைதி படத்தில் கார்த்தியை மட்டுமே அதிகளவில் பயன்படுத்தி லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த நிலையில், இத்தனை நடிகர்களை தனது கதையில் வைக்கிறார் என்றால், நிச்சயம் தளபதி 64 வேற லெவலில் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
லிப் லாக்
ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் வெளியான ஆடை படத்தில் ரம்யா போல்டான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும், அந்த படத்தில் நடிகை அமலா பாலுக்கு லிப் லாக் கொடுக்கும் காட்சியிலும் நடித்து கோலிவுட்டையே அதிரவைத்தார் ரம்யா. நிச்சயம் ‘தளபதி 64' படத்திலும் ரம்யாவுக்கு சவாலான கதாபாத்திரம் இருக்கும் என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











