இவர்தான் இந்தியாவுலேயே அழகாம்.. பாலாஜியை பார்த்து ஜொள்ளுவிட்ட ரம்யா.. ஷிவானிக்கு செம பங்கம்!
சென்னை: பாலாஜியை பார்த்து இவர்தான் இந்தியாவுலேயே அழகாம் என்று ஜொள்ளுவிட்ட ரம்யா, இடையில் வந்த ஷிவானியையும் பங்கம் செய்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ரம்யா சிரித்துக் கொண்டே எல்லா வேலையையும் பார்த்து விடுகிறார்.
இதனால் சாஃப்ட் ஹர்ட் என்று கடந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றார்.

எண்டெர்டெய்ன்
பாலாஜி மற்றும் ஷிவானியுடன் நெருக்கமாக இருந்து வரும் ரம்யா, அவர்களுக்கு பின்னால் படு மோசமாக கலாய்த்து வருகிறார். குறிப்பாக ஷிவானி, பாலாஜியைதான் எண்டெர்டெய்ன் செய்து வருகிறார் என சக ஹவுஸ்மேட்ஸ்களிடம் கூறி வருகிறார்.

கமலிடம் குட்டு
ஷிவானி பாலா மாமா பாலா மாமா என அவரையே சுற்றி வருவதாகவும் கூறி கிண்டலடித்து வருகிறார். மேலும் என்ன பிரச்சனை நடந்தாலும் குற்றம்சாட்டப்பட்ட நபரை வளைத்து வளைத்து கேள்வி கேட்டு வருகிறார். இதற்காக கமலிடம் குட்டு வாங்கினார்.

ஆஜித்துடன் பேச்சு
மேலும் தான் நியூட்ரல் என்று கூறிக் கொண்டாலும், பாலாஜிக்கு ஆதரவாக இருந்து வருகிறார் ரம்யா. இந்நிலையில் நேற்றைய எபிசோடில், டைனிங் ஏரியா சோஃபாவில் அமர்ந்து ஆஜித்துடன் பேசிக் கொண்டிருந்தார்.

இந்தியாவுலேயே அழகாம்டா
அப்போது அங்கு பாலாஜி வரவும், இவர்தான் மிஸ்டர் இந்தியாவாடாம், இந்தியாவுலேயே இவர்தான் அழகாம்டா என்று ஜொள்ளுவிட்டார். மேலும் ஒவ்வொரு ரவுண்டையும் பல வருஷம் பண்ணியிருப்பார் போல என்றும் கிண்டலடித்தார்.

உலகத்துலேயே அழகு
அப்போது குறுக்கிட்ட ஷிவானி, அய்யோ அப்படி சொல்லாதீங்க, மனசு தாங்க முடியல என்று திரும்ப திரும்ப அதையே சொன்னார். மேலும் உலகத்துலேயே இவர்தான் அழகுன்னு சொல்லாதீங்க என்றார்.

உங்க மனசுல உள்ளதை..
அதனைக் கேட்ட ரம்யா, உங்க மனசுல உள்ளதையெல்லாம் சொல்லாதீங்க. நாங்க உலகத்துலேயே இவர்தான் அழகுன்னு சொல்லவே இல்ல..எங்க மனசுல உள்ளத நாங்க பேசுறோம் என ரம்யாவை மரணமாய் கலாய்த்தார்.


Click it and Unblock the Notifications











