ரம்ஜான் கொண்டாடிய சின்னத்திரை நட்சத்திரங்கள்
Recommended Video
சென்னை: பெரிய திரையைப் போலவே இப்போதெல்லாம் சின்னத் திரை கலைஞர்களும் தங்களது ஒவ்வொரு நிகழ்வையும் சமூக வலைதளத்தில் பதிவு செய்யத் தவறுவதில்லை. கிட்டத்தட்ட பெரியதிரைக்கு செமையாக டஃப் கொடுக்கின்றனர் சின்னத் திரை கலைஞர்களும்.
நேற்று ரம்ஜான் பண்டிகை உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ரம்ஜானை கொண்டாடிய சின்னத்திரை பிரபலங்கள், தங்களது சமூக வலைதளங்களில் அதை பதிவிட்டுள்ளனர்.
கொண்டாடியதோடு மட்டுமல்லாமல் பிரியாணி எங்கப்பா என்று கேட்கவும் பலர் தயங்கவில்லை. ரம்ஜான் கொண்டாட்டத்தை விட பிரியாணி கேட்டோரின் பதிவுகள்தான் ஏகப்பட்டது இருந்தது.
ஷபானா
சின்னத்திரை ரசிகர்களால் பார்வதியாக அறியப்பட்ட செம்பருத்தி நாயகி சபானா ஷாஜகான், ரசிகர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து கூறியுள்ளார். பதிலுக்கு வாழ்த்து கூறியுள்ள ரசிகர்கள், அவரிடம் பிரியாணி கேட்டு வருகின்றனர். (அவரையும் விட்டு வைக்கலயேப்பா)
மணிமேகலையின் வாழ்த்து
சன் மியூசிக் தொகுப்பாளினி மணிமேகலை, ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டது நாம் அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருவரும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றனர்.
ரம்ஜான் வாழ்த்துகள்
ரம்ஜானை உற்சாகமாக கொண்டாடியுள்ள இந்த ஜோடி, ரசிகர்களுக்கும் ரம்ஜான் வாழ்த்து கூறியுள்ளது. அவர்களுக்கும் ரசிகர்கள் வளைத்து வளைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிக் பாஸ் விஜயலட்சுமி
மணிமேகலையை போன்றே நடிகை விஜயலட்சுமியும் இஸ்லாமியரை காதலித்து திருமணம் கொண்டவர். இயக்குனர் அகத்தியனின் மகளான அவர், ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் சீசன் 2 மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்தவர். ‘அனைவருக்கும் திருமதி ஃபெரோசின் ரம்ஜான் வாழ்த்துகள் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ரம்யாவின் வாழ்த்து
விஜயலட்சுமிக்கு சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யாவும் வாழ்த்து தெரிவித்து ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் விஜயலட்சுமியின் கணவருக்கும் சேர்த்து வாழ்த்தியுள்ளார்.
செம்பருத்தி
செம்பருத்தி சீரியலில் மித்ரா வேடத்தில் வில்லியாக நம்மை மிரட்டி வரும் பரதா நாயுடு, ரசிகர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து கூறியுள்ளார். கர்நாடகாவை சேர்ந்தவரான பரதா நாயுடு நன்றாகவே தமிழ் பேசுகிறார்.
சன் தியா
சன் டிவி விஜே தியா அப்படியே இஸ்லாமியப் பெண் போல காட்சி அளித்து புகைப்படம் போட்டு ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
நாயகி ஆனந்தி
நாயகி சீரியல் ஆனந்தியோட ரம்ஜான் வாழ்த்துகளை சன் டிவி போட்டுக் காட்டி ரசிகர்களுக்கும், நேயர்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தது.
சன் பிரியாணி
அதை விட வேற லெவல் இது. பிரியாணி பிடிக்காதவங்க யாராவது இருக்க முடியுமா..? அதுவும் ரம்ஜான் பிரயாணின்னு சொன்னா, கேக்கவா வேணும்... சன் டிவியில் சின்னத் திரை கலைஞர்களை வைத்து பிரியாணி சமைத்துக் காட்டி வாயில் எச்சில் ஊற வைத்து விட்டனர்.

சின்னத்திரை கலைஞர்கள்
இதேபோல மேலும் பல சின்னத்திரை நடிகர், நடிகைகளும், ரம்ஜானைக் கொண்டாடியுள்ளனர் அல்லது கொண்டாடியோருக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சிப் பதிவுகளை போட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











