அந்தப் பிரமாண்ட அரண்மனையில் பிரபல நடிகர் ராணா- மிஹீகா திருமணம்.. தொடர்கிறது கொண்டாட்டங்கள்!

By

சென்னை: பிரபல நடிகர் ராணா டக்குபதி - மஹீகா பஜாஜ் திருமணம் பிரமாண்ட அரண்மனையில் நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

Rana Daggubati Engaged with Miheeka Bajaj - Official

த்ரிஷா உட்பட சில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகர் ராணா, மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்தார்.

அவர் தனது காதலை ஏற்றுக் கொண்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் அறிவித்திருந்தார், ராணா.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

அவரது புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். இதையடுத்து இவர்கள் திருமணத்துக்கு இருவர் குடும்பமும் சம்மதம் தெரிவித்தது. கடந்த சில நாட்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் ராமநாயுடு ஸ்டூடியோவில் நடந்தது. நடந்தது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. கொரொனா காரணமாக திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளனர்.

விழா ஏற்பாடுகள்

விழா ஏற்பாடுகள்

மணப்பெண், மிஹீகா, ஐதராபாத்தில் வளர்ந்த இன்டீரியர் டிசைனர். ட்யூ ட்ராப் டிசைன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் திருமணத்துக்கு முன்னுள்ள விழா ஏற்பாடுகள் இருவர் வீட்டிலும் தொடங்கியுள்ளன. நடிகர் ராணா குடும்பத்தினர், மிஹீகா வீட்டுக்கு நேற்று குடும்பத்துடன் சென்றனர். அங்கு சம்பிரதாய விழாவில் கலந்துகொண்டனர்.

மணமகன் குடும்பம்

மணமகன் குடும்பம்

இதை உறுதிப்படுத்தியுள்ள ராணாவின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான சுரேஷ்பாபு, 'தெலுங்கில் இந்த சடங்குக்கு லக்னா பத்ரிகலு (lagna patrikalu) என்று சொல்வோம். மணமகன் குடும்பம் மணமகள் வீட்டுக்குச் சென்று பத்திரிகைகளை கொடுக்கும் சடங்கு. இதில் இரண்டு குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டோம்' என்றார்.

பாலாக்ணுமா அரண்மனை

பாலாக்ணுமா அரண்மனை

இந்நிலையில், இந்த விழா பற்றி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மிஹீகா, தனது போட்டோவையும் பதிவிட்டுள்ளார். கூடவே கொண்டாட்டங்கள் தொடர்கின்றன என்று கூறியுள்ளார். நடிகை சமந்தா உட்பட பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே திருமணம், ஐதராபாத்தில் உள்ள பிரமாண்ட பாலாக்ணுமா அரண்மனையில் (Falaknuma Palace) நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஐதராபாத்தில் உள்ள பிரமாண்ட அரண்மனைகளில் ஒன்று இது.

பாகுபலி

பாகுபலி

தெலுங்கு நடிகரான ராணா, பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம், இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார். இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். அஜித்தின் ஆரம்பம், பெங்களூர் நாட்கள் உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ள ராணா, இப்போது பிரபு சாலமன் இயக்கும் காடன் படத்தில் நடித்துள்ளார். சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X