சமந்தாவைப் பாராட்டிய பாகுபலி நடிகர்!
ராணா சமந்தாவை பாராட்டியுள்ளார்.
சென்னை: நடிகர் ராணா சமந்தாவுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தாவுக்கு சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடித்த சீமராஜா திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அவரின் அடுத்த படமான யூ டர்ன் திரைப்பட ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.
யூ டர்ன் ட்ரெயிலரைப் பார்க்கும்போது படத்தில் பல அதிரடி திருப்பங்கள் இருக்கும் எனத் தெரிகிறது. ட்ரெயிலரைப் பார்த்த பாகுபலி நடிகர் ராணா டகுபதி, மிகச் சிறப்பு என பதிவிட்டுள்ளார்.

தெலுங்கு இயக்குனர் பவன்குமார் இயக்கத்தில் சமந்தா, ஆதி, ராகுல் ரவீந்திரன், பூமிகா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இது கன்னடத்தில் 2016 ஆம் ஆண்டு ரிலீசான யூ டர்ன் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கன்னடத்தில் நடித்திருந்தார்.
தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும், ரீமேக் செய்யப்பட்டுள்ள இப்படம் செப்டம்பர் 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்திற்கு பூர்ண சந்திர தேஜஸ்வி இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











