த்ரிஷாவின் தந்தை இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட ராணா!
ஹைதராபாத்: மாரடைப்பால் காலமான த்ரிஷாவின் அப்பா கிருஷ்ணன் இறுதிச் சடங்கில் பங்கேற்று, த்ரிஷாவுக்கு ஆறுதல் கூறினார் நடிகர் ராணா.
த்ரிஷாவின் தந்தை கிருஷ்ணன் நேற்று ஹைதராபாத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

திரையுலகினருக்கு தெரியாமல்...
த்ரிஷாவும் அவரது அம்மாவும் கிருஷ்ணனின் மறைவு குறித்து பெரிய அளவில் செய்தி வெளியிடவில்லை. முடிந்தவரை இந்த விஷயத்தை அடக்கி வாசித்தார்கள்.
காரணம், கிருஷ்ணன் கடைசி வரை த்ரிஷா மற்றும் அவர் அம்மாவுடன் சேர்ந்து வசிக்கவில்லை. மகள் நடித்து சம்பாதித்து தரும் பணத்தில் வாழ விரும்பாமல், சினிமாவின் நிழல் படியாமல் தன் சொந்த சம்பாத்தியத்தில் வாழ்ந்தவர் கிருஷ்ணன்.

12 ஆண்டுகள்
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு, த்ரிஷா மிஸ் மெட்ராஸாக தேர்வாகி சினிமா வாய்ப்பு தேடி அம்மாவுடன் கோடம்பாக்கத்துக்குள் நுழைந்தபோது, கோபித்துக் கொண்டு போனாராம் கிருஷ்ணன்.
இந்த 12 ஆண்டுகளில் ஒரு வார்த்தை கூட உமாவுடன் கிருஷ்ணன் பேசியதே இல்லை என்கிறார்கள். ஆனால் த்ரிஷா எப்போதாவது ஒரு முறை அவரை யாருக்கும் தெரியாமல் சந்திப்பாராம்.

அடுத்த நாள்தான்...
அவர் இறந்தது கூட அடுத்த நாள்தான் த்ரிஷா மற்றும் அவர் அம்மாவுக்குத் தெரியுமாம்.
உடனடியாக ஹைதராபாதுக்குப் பறந்தனர் இருவரும். தமிழ் சினிமாவிலிருந்து யாருக்கும் அவர்கள் தகவல் சொல்லவில்லை, விஷயம் தெரிந்தும் யாரும் போகவுமில்லை.

ராணா மட்டும்...
த்ரிஷாவின் வருங்கால மாப்பிள்ளை என்று பேசப்படும் ராணா மட்டும் கிருஷ்ணனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து த்ரிஷாவையும் அவரது அம்மாவையும் காரில் அழைத்துச் சென்றதிலிருந்து, கிருஷ்ணன் அடக்கம் செய்யப்படும் வரை கூடவே இருந்தார் ராணா!


Click it and Unblock the Notifications