மெக்சிகோ சரக்கு.. அனிருத் ராணா டகுபதி இணைந்து விற்கிறாங்க.. விலை எவ்வளவு தெரியுமா?
சென்னை: இந்தியாவைப் பொறுத்தவரை வெளிநாடு என்றாலே ஒரு தனி மோகம் ஏற்பட்டுவிடுகிறது. அதுவும் வெளிநாட்டு பிராண்ட்கள் என்றாலே மக்கள், அந்த பொருள் குறித்து எப்படியாவது தேடிப்பிடித்து தெரிந்து கொண்டு அதை பயன்படுத்துவும் செய்து விடுகிறார்கள். வெளிநாட்டு பொருட்களை பயன்படுத்துவது என்பது இந்தியா போன்ற வளரும் நாட்டில் ஒரு கௌரவம் என்ற மனநிலையில் இருக்கும் மக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது வெளிநாட்டு மதுபானம் என்றால் சொல்லவா வேண்டும். அப்படியான மதுபானத்தை தான் இந்தியாவில் லான்ச் செய்துள்ளார்கள், அனிருத்தும் ராணா டகுபதியும். இது குறித்து பார்க்கலாம்.
இசையமைப்பாளர் அனிருத்தும் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ராணா டகுபதியும் இணைந்து இந்தியாவில் லாஞ்ச் செய்துள்ள மதுபானம் என்றால், அது Loca Loka என்பது ஒரு ப்ரீமியம் டெகிலா மதுபானத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார்கள். இதில் இவர்களுடன் தொழிலதிபர் ஹர்ஷா வட்லமுடியும் இணைந்துள்ளார்.

மெக்சிகோ சரக்கு: கடந்த ஆண்டே சோதனைக்காக இந்தியாவில் இதனை கொண்டு வந்திருந்தார்கள். குறிப்பாக பெரிய பெரிய நட்சத்திர விடுதிகள், இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் இதற்காக தனி விளம்பரங்கள் செய்து விற்பனையும் செய்தனர். அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மதுபானம் விற்பனை ஆனதால், டெகிலா மதுபானத்தை இந்தியாவில் சில்லறை விற்பனையாக செய்ய, முடிவெடுத்து, அதற்கான தொடக்க விழா நேற்று அதாவது நவம்பர் 22 ஆம் தேதி மிகவும் பிரமாண்டமான முறையில் மும்பையில் நடைபெற்றது. இந்த தொடக்க விழாவுக்கு நடிகர், ஷாரூக் கானின் மகன், ஆர்யன் கானுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல், பல வெளிநாட்டு முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் டெகிலாவின், அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது.
விலை என்ன தெரியுமா? : மேலும், அனிருத் மற்றும் ராணா டகுபதி இணைந்து மெக்சிகோவுக்கு சென்று இந்த மதுபானம் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை பார்த்துவிட்டு வந்துள்ளனர். இந்தியாவில் இந்த மதுபானம் இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. Loca Loka Blanco என்ற வகையும், Loca Loka Reposado என்ற வகையும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் Loca Loka Blanco சுமார் ரூபாய் 4500க்கும் Loka Reposado என்ற மதுபானம், சுமார் ரூபாய் 5,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அனிருத் இந்த மதுபானத்தை லான்ச் செய்துள்ளதால், தமிழ்நாட்டிலும் இதற்கு தனி வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முதற்கட்டமாக மும்பையில் மட்டும் விற்பனையைத் தொடங்கியுள்ளார்கள். இந்தியாவில் ஒரு மில்லியன் பாட்டில்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications











