For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  காதலியை கரம்பிடித்தார் ராணா.. களைக்கட்டிய கல்யாண விருந்து.. வெளியானது அசத்தல் மெனு லிஸ்ட்!

  |

  சென்னை: நடிகர் ராணா இன்று தனது காதலியான மீஹிகாவை சுற்றமும் நட்பும் சூழ திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் அவரது திருமண விருந்தில் இடம் பெற்ற மெனுக்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

  நடிகர் ராணா டகுபதி பிரபல தெலுங்கு திரைக்குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தாத்தா, அப்பா என பலரும் தெலுங்கு சினிமாவில் புகழ் பெற்ற தயாரிப்பாளர்கள்.

  2010ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான லீடர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் ராணா. தொடர்ந்து இந்தி சினிமாவிலும் நடித்தார்.

  மாப்பிள்ளை ரெடி.. சமந்தா விஷ் பண்ணியாச்சு.. களைகட்டும் நடிகர் ராணாவின் திருமண வைபவம்!மாப்பிள்ளை ரெடி.. சமந்தா விஷ் பண்ணியாச்சு.. களைகட்டும் நடிகர் ராணாவின் திருமண வைபவம்!

   பாகுபலி பல்வாள் தேவன்

  பாகுபலி பல்வாள் தேவன்

  தெலுங்கு இந்தி என கலக்கி வந்த ராணா டகுபதி, அஜித்துடன் ஆரம்பம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழிலும் தடம் பதித்தார். ராணா நடிப்பில் வெளியான பாகுபலி சீரிஸ் படங்கள் பட்டைய கிளப்பின. பல்வாள் தேவனாக வில்லத்தனமான நடிப்பில் மிரட்டினார்.

   காதல் முறிவு

  காதல் முறிவு

  இதன் மூலம் உலகம் முழுக்க பெரும் பிரபலமானார் நடிகர் ராணா. நடிகை த்ரிஷாவுடன் காதல் உறவில் இருந்தார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அவர்களின் காதல் முறிந்தது. இந்நிலையில் நடிகர் ராணா, ஹைதராபாதைச் சேர்ந்த இன்டீரியர் டிஸைனர் மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்தார்.

   நிச்சயதார்த்தம்

  நிச்சயதார்த்தம்

  மிஹீகா தனது காதலை ஏற்றுக்கொண்டதாக கூறி கடந்த மே மாதம் தனது சமூக வலைதளத்தில் அறிவித்தார். தொடர்ந்து குடும்பத்தினரால் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டு கல்யாண தேதி முடிவு செய்யப்பட்டது. ராணாவின் திருமணத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தகவல் வெளியானது.

   பிரபல மேடை

  பிரபல மேடை

  இந்நிலையில் இன்று மாலை நடிகர் ராணா தனது காதலியான மிஹீகாவை கரம் பிடித்தார். இதில் டோலிவுட் பிரபலங்களான வெங்கடேஷ், சமந்தா உள்ளிட்டட பலர் பங்ககேற்றனர். ஹைத்ராபாத்தில் உள்ள ராமநாயுடு ஸ்டுடீயோவில் திருமணம் நடைபெற்றது. டோலிவுட்டில் மிகப்பெரிய பிரபலங்கள் மற்றும் மிகப் பெரிய குடும்பத்தின் திருமணங்கள் என்பதை பறைசாற்றும் வகையில் கல்யாண மேடை அமைக்கப்பட்டிருந்தது.

   ராமநாயுடு ஸ்டுடியோஸ்

  ராமநாயுடு ஸ்டுடியோஸ்

  இந்த திருமணத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு வழிகாட்டுதல்களையும் கடைபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 30 பேர் கொண்ட வரையறுக்கப்பட்ட விருந்தினர் பட்டியலுடன், கொண்டாட்டங்கள் 2 நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டன. திருமணம் காரணமாக ராமநாயுடு ஸ்டுடீயோ மின் விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு திருவிழா கோலம் பூண்டுள்ளது.

   மெனுவும் அப்படியே

  மெனுவும் அப்படியே

  இந்த திருமணம் தெலுங்கு-மார்வாரி கலாச்சாரங்களின் ஒருங்கிணைப்பாக நடைபெற்றது. மேலும் இந்த கலாச்சால இணைப்பு திருமண மெனுவிலும் பிரதிபலிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஜோடி நாட்டின் இரண்டு வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், என்பதால் மெனுவும் அப்படியே உள்ளது. இந்த பிரத்யேக திருமண மெனுவை ஹைதராபாத்தின் தாஜ் ஃபலக்னுமா பேலஸ் நிர்வகிக்கிறது.

   மார்வாரி உணவு வகைகள்

  மார்வாரி உணவு வகைகள்

  மார்வாரிகள் உணவான ராஜஸ்தானின் ஸ்பெஷல் ஐட்டங்கள் இந்த திருமண விருந்தில் இடம்பெற்றது. தனித்துவமான மசாலாக்கள், சுவை மிகுந்த உணவுகள் என்று புகழப்படுவது ராஜஸ்தானி உணவு வகைகள். ராஜஸ்தான் உணவு கலாச்சாரம் அதன் வளமான சமையல் பாரம்பரியத்தை பெருமைப்படுத்தும் வகையில் உள்ளது. அதன்படி மார்வாரி உணவு மெனுவில் ஒரு பகுதியாக இருந்தால், மெனுவில் கச்சோரிஸ், பக்கோராஸ், தால்-பாத்தி சுர்மா, லால் மாஸ், கட்டே கி சப்ஸி ஆகியவை இடம்பெற்றுள்ளது.

   ஆந்திரா ஸ்பெஷல்

  ஆந்திரா ஸ்பெஷல்

  இதேபோல் ராணா டகுபதி தென்னிந்தியாவை சேர்ந்தவர் என்தால், தென்னிந்திய உணவு வகைகளும் இடம் பெற்றுள்ளது. தென்னிந்திய உணவு மெனுவில் குறிப்பாக ஆந்திரா ஸ்பெஷல் ஐட்டங்களான புலாவ், தலகாயா குரா, செபாலா புலுசு, எண்டு சபாலா வான்கயா, பெசரா பப்பு, பச்சி புலுசு, ரசம், பப்புச்சாரு போன்றவை இடம் பெற்றுள்ளன.

   பஞ்சாபி ஐட்டம்ஸ்

  பஞ்சாபி ஐட்டம்ஸ்

  மேலும் ராணாவுக்கு டெல்லி உணவு பிடிக்கும் என்பதால் அவரது கல்யாண விருந்தில் அம்மாநில ஸ்பெஷல் ஐட்டங்களும் இடம் பெற்றுள்ளன. இதனிடையே மிஹீகாவின் தந்தை பஞ்சாப்பை சேர்ந்தவர் என்பதால் பஞ்சாப்பின் ஸ்பெஷல் ஐட்டங்களான பட்டர் சிக்கன், தால் மக்கானி, கதாய் பன்னீர் போன்ற சில உணவுகளும் ராணா - மிஹீகா கல்யாண விருந்தில் இடம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

  English summary
  Rana Daggubati and Miheeka Bajaj’s wedding menu goes viral. Rana ties knot with Miheeka today in Hyderabad.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X