யானைகள் வீட்டிற்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்.. ராணா டகுபதி, விஷ்ணு விஷாலின் காடன் டிரைலர்!

சென்னை: தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய படமாக உருவாகி உள்ள காடன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

மைனா, கும்கி, கயல் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பிரபு சாலமனின் அடுத்த தரமான படைப்பு.

ராணா டகுபதி, விஷ்ணு விஷால் இணைந்து மிரட்டும் இந்த திரைப்படம் காடு மற்றும் யானைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இயற்கை காதலன்

இயற்கை காதலன்

இயக்குநர் பிரபு சாலமன் இயற்கையின் மீது தீராத காதல் கொண்டவர் என்பது அவர் இயக்கும் படங்களை பார்த்தாலே ரசிகர்களுக்கு புரிந்து விடும். கண்ணோடு காண்பதெல்லாம் எனும் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான இவர், கிங், கொக்கி, லீ, லாடம் என வித்தியாசமான படங்களை இயக்கி வந்தார்.

மைனா, கும்கி

மைனா, கும்கி

ஆனால், அதன் பின்னர் இவர் இயக்கிய மைனா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. மைனா படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய கும்கி திரைப்படத்தில் நாயகனாக நடிகர் சிவாஜியின் பேரனும் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு நடித்திருந்தார். மதம் பிடித்த யானைகளை விரட்டும் கும்கி யானை பற்றிய கதையை உருவாக்கி இருந்தார்.

காடன்

காடன்

அதன் பின்னர், கயல் மற்றும் தொடரி படங்களை இயக்கிய பிரபு சாலமன் மீண்டும் யானைகளை வைத்து உருவாக்கி உள்ள படம் தான் காடன். ஹிந்தி, தெலுங்கு என பான் இந்திய படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் லீடு ரோலில் ராணா டகுபதியும் விஷ்ணு விஷாலும் நடித்துள்ளனர். அதன் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

யானை ஊருக்குள் புகவில்லை

யானை ஊருக்குள் புகவில்லை

காடுகளை அழித்து நகரங்களாக மாற்றி வரும் மனிதர்களின் சுயநலத்தால் ஏகப்பட்ட மிருகங்கள் பாதிக்கப்படுகின்றன. இதில் முக்கியமாக யானைகள் தங்கள் வழிதடத்தை நோக்கியே எப்போதும் பயணிக்கும் திறன் உடையவை என்பதால், அவ்வப்போது யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் என செய்திகள் வெளியாவதை நாம் காண முடியும்.

மனிதர்கள் அட்டகாசம்

மனிதர்கள் அட்டகாசம்

உண்மையில் யானைகள் ஊருக்குள் புகவில்லை. மனிதர்களாகிய நாம் தான் அதன் வீடான காட்டில் புகுந்து அட்டகாசம் செய்கிறோம் என்பதை இந்த காடன் டிரைலரே நன்கு உணரவைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. காட்டை சுற்றி வில்லன் சுவர் கட்டுவதும், அவற்றை யானைகளை விட்டு இடித்துத் தள்ளுவதும் என ராணா டகுபதி மிரட்டுகிறார்.

டாக்டருடன் மோதல்

வரும் மார்ச் 26ம் தேதி சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் வெளியாகவுள்ள நிலையில், காடன் படமும் அதே தேதியில் நாடு முழுவதும் வெளியாகிறது. இதன் மூலம் கோலிவுட்டில் மார்ச் மாதம் மீண்டுமொரு நல்ல கிளாஷ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷ்ணு விஷால் நெகட்டிவ் ஷேட்களுடன் தனக்கு கொடுக்கப்பட்ட ரோலில் கச்சிதமாக நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X