பிறந்தநாளா முக்கியம்?.. பிரெண்ட்ஷிப் தான் முக்கியம்.. அல்லு அர்ஜுனை சந்தித்த பாகுபலி பட நடிகர்!

ஹைதராபாத்: பாகுபலி படத்தில் வில்லனாக மிரட்டிய ராணா டகுபதி இந்த ஆண்டு தமிழில் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்திலும் வில்லனாக மாஸ் காட்டியிருந்தார். அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற நிலையில், நேற்று முதல் அல்லு அர்ஜுன் வீட்டுக்கு வந்து சென்றுக் கொண்டிருந்த ராணா டகுபதி இன்று அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவரை நேரில் சந்தித்த தருணங்கள் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராணா டகுபதி இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஆனால், பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்துவிட்டு அல்லு அர்ஜுனை அவர் சந்திக்க சென்றதும் அங்கே அல்லு அர்ஜுனுக்கும் அவருக்கும் இடையே நடந்த நிகழ்வுகள் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளன.

allu arjun rana daggubati

ராணா டகுபதி மட்டுமின்றி அல்லு அர்ஜுனை ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் நேரில் வந்து சந்தித்து பேசி வருகின்றனர். நேற்று ஒரு நாள் இரவு முழுவதும் அல்லு அர்ஜுன் சிறையில் இருந்த நிலையில், பலரும் அவரை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

சிறையில் இருந்து திரும்பி வந்த அல்லு அர்ஜுன்: ரேவதி எனும் பெண் சந்தியா தியேட்டரில் நடந்த கூட்ட நெரிசல் காரணமாக பலியானார். அந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 14 நாட்கள் ரிமாண்ட் என குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. தெலங்கானா உயர்நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு ஜாமின் வழங்கிய நிலையில், அவர் இன்று காலை வீட்டுக்குத் திரும்பினார். கண்ணாடி அறையில் உட்கார்ந்துக் கொண்டு மீடியாக்கள் பார்வை படும் அளவுக்கு சினிமா பிரபலங்களை சந்தித்து வருகிறார்.

ராணா டகுபதி சந்திப்பு: பவன் கல்யாண், சிரஞ்சீவி, ராணா டகுபதி உள்ளிட்ட பலரும் நேற்றே அல்லு அர்ஜுன் வீட்டுக்குச் சென்று ஆறுதல் தெரிவித்தனர். இந்நிலையில், அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து வெளியேறிய நிலையில், அவரை சந்தித்து ராணா டகுபதி ஆறுதல் தெரிவித்தார்.

போனில் பேசிக்கொண்டே அல்லு அர்ஜுன் செய்த செயல்: ராணா டகுபதி வரும் போது அல்லு அர்ஜுன் போனில் பேசிக் கொண்டிருந்தார். அல்லு அர்ஜுனை தொந்தரவு செய்யக் கூடாது என ராணா டகுபதி விலகி செல்ல நினைக்கும் போது அவரது கையை பிடித்தவாறே போன் பேசி முடித்த அல்லு அர்ஜுன் போன் பேசி முடித்ததும் கட்டியணைத்து வரவேற்ற காட்சிகள் ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கியுள்ளது.

பர்த்டே முக்கியமல்ல: ராணா டகுபதி 1980ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி பிறந்தார். இன்று அவரது 40வது பிறந்தநாள். ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பாகுபலி நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாட செல்லாமல் அல்லு அர்ஜுன் தான் முக்கியம் என அவரை காண வந்துள்ளார்.

டோலிவுட் பிரபலங்கள் படையெடுப்பு: புஷ்பா 2 படத்தின் இயக்குநர் சுகுமார், நடிகர்கள் விஜய தேவரகொண்டா, ராணா டகுபதி, நாக சைதன்யா என பல முன்னணி தெலுங்கு சினிமா பிரபலங்கள் அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். சிறை அனுபவம் எப்படி இருந்தது என்றும் கிண்டலாக பேசிக் கொள்ளும் காட்சிகளும் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X