Rana Daggubati Net Worth: வேட்டையன் வில்லன் பிறந்தநாள்.. ராணா டகுபதிக்கு இத்தனை கோடி சொத்து இருக்கா?

ஹைதராபாத்: தயாரிப்பாளர் டகுபதி சுரேஷ் பாபுவின் மகனான ராணா டகுபதி இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தில் முக்கிய வில்லனே ராணா டகுபதி தான் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு லைகா நிறுவனம் வாழ்த்து தெரிவித்த நிலையில், ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்தி வருகின்றனர். அவருடைய சம்பளம், சொத்து மதிப்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே காணலாம் வாங்க..

Rana Daggubati celebrates his 39th birthday today, here we look about his net worth and assets

பாகுபலி வில்லன்: ராணா டகுபதி என்று ஒருத்தர் இருப்பதே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பாகுபலி படத்தின் மூலம் தான் தெரிய வந்தது. அந்த படத்தில் அவர் நடித்த அசுரத்தனமான நடிப்பு ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் மிரட்டியது. ருத்ரமாதேவி, காடன், ராணா நாயுடு என தொடர்ந்து மாஸ் காட்டி வரும் ராணா டகுபதி அடுத்து வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.

வேட்டையன்: த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் தலைவர் 170 படத்துக்கு வேட்டையன் என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராணா டகுபதி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சம்பளம்: டோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் ராணா டகுபதி தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் படங்களிலும் நடித்து வருகிறார். இந்தியில் தம் மாரோ தம், ஹவுஸ்ஃபுல் 4 உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் புதிய படங்களுக்கு 3 முதல் 4 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வருகிறார். மேலும், விளம்பரப் படங்களுக்கு 50 லட்சம் முதல் 70 லட்சம் வரை வாங்கி வரும் இவர் வருடத்துக்கு 8 கோடி வரை சம்பாதித்து வருகிறார்.

சொகுசு கார்கள்: ஹைதராபாத்தில் சொகுசு வீடு வைத்துள்ள ராணா டகுபதி தனது அப்பாவின் தயாரிப்பு நிறுவனத்தையும் கவனித்து வருகிறார். மேலும், சொகுசு கார்களின் பிரியரான இவர் BMW 7 சீரிஸ், ஜாகுவார் XF, மெர்சிடஸ் பென்ஸ் உள்ளிட்ட பல சொகுசு கார்களை வைத்துள்ளார்.

சொத்து மதிப்பு: பான் இந்தியா ஸ்டாராக வலம் வரும் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி 39 வயதில் 45 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வேட்டையன் பட நடிகருக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X