பட்டு வேஷ்டி சட்டையில் பல்வால் தேவன்.. காதலியுடன் இனிதே நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. வைரல் பிக்!

சென்னை: காதலி மிஹீகாவுடன் நிச்சயம் தார்த்தம் நடந்து முடிந்தது என நடிகர் ராணா படு குஷியாக அறிவித்துள்ளார்.

Recommended Video

Rana Daggubati Engaged with Miheeka Bajaj - Official

பிரபல தெலுங்கு நடிகரான ராணா டக்குபதியின் காதல் விவகாரம்தான் கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் டாப் செய்தியாக வலம் வருகிறது. தெலுங்கு மட்டுமின் தமிழ், இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார் ராணா.

நடிகை திரிஷா உடனான காதல் முறிந்த பிறகு சிங்கிளாகவே இருந்து வந்தார் ராணா. இந்நிலையில் கடந்த வாரம் தனது காதலுக்கு அவர் எஸ் சொல்லிவிட்டார் என தனது காதலியுடன் இருக்கும் போட்டோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார் ராணா.

டிஸைன் ஸ்டுடியோஸ்

டிஸைன் ஸ்டுடியோஸ்

ராணாவின் காதலியான மிஹீகா பஜாஜ், ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். இன்டீரியர் டிஸைனரான மிஹீகா பஜாஜ், ட்யூ ட்ராப் டிஸைன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஈவென்ட் மேனேஜ்மென்ட், ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளையும் தனது நிறுவனத்தின் மூலம் செய்து வருகிறார் மிஹீகா.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

மிஹீகா லண்டனில் இன்டீரியர் டிசைனிங் முடித்துள்ளார். இருவரின் காதல் செய்தியையும் அறிந்த திரை பிரபலங்களும் ரசிகர்களும் ராணாவுக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். இந்நிலையில் ராணாவுக்கு தனது காதலி மிஹீகாவுடன் திருமண நிச்சசயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

பட்டு வேஷ்ட்டி சட்டை

பட்டு வேஷ்ட்டி சட்டை

அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் ராணா, இப்போது அதிகாரப்பூர்வமாகிவிட்டது என தெரிவித்துள்ளார். அந்த போட்டோவில் ராணா பட்டு வேஷ்ட்டி சட்டையிலும் மிஹீகா பட்டுப்புடவையிலும் அசத்தலாய் உள்ளனர்.

சிவகார்த்திகேயன் வாழ்த்து

சிவகார்த்திகேயன் வாழ்த்து

இருவரும் சேரில் அமர்ந்திருப்பது போன்றும், மிஹீகாவை ராணா அணைத்து செல்வது போன்றும் உள்ளது. ராணாவின் இந்த பதிவை பார்த்து பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்துகள் டீயர் பிரதர் என பதிவிட்டுள்ளார்.

ஜோடி பொருத்தம் சூப்பர்

ஜோடி பொருத்தம் சூப்பர்

நடிகர் சதீஷ், தெலுங்கு நடிகர் வருண் தேஜ் உள்ளிட்ட பலரும் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதேபோல் இன்ஸ்டாகிராமிலும், டிடி, ஷ்ரேயா ஸ்ரீநாத், சனம் ஷெட்டி உள்ளிட்ட பலரும் ஜோடி பொருத்தம் சூப்பர் என தெரிவித்து வருகின்றனர். ராணா மற்றும் மிஹீகாவின் நிச்சயதார்த்த போட்டோக்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X