என் வாழ்க்கையில் சிறந்த நேரம்.. இதுதான் கல்யாண தேதி.. கன்பர்ம் பண்ணினார் பிரபல நடிகர் ராணா!
ஐதராபாத்: தனது திருமணம் எப்போது நடக்கிறது என்பதை நடிகர் ராணா உறுதிப்படுத்தி உள்ளார்.
Recommended Video
நடிகர் ராணா, மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்தார். அவர், தனது காதலை ஏற்றுக் கொண்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன் ட்விட்டரில் அறிவித்திருந்தார், ராணா.
ஐதராபாத்தில் வளர்ந்த இன்டீரியர் டிசைனரான மிஹீகா பஜாஜ், ட்யூ ட்ராப் டிசைன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

பிரபு சாலமனின் காடன்
ராணா, தமிழில் அஜித்தின் ஆரம்பம், பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகரான இவர், பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம், இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார். இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். இப்போது பிரபு சாலமன் இயக்கும் காடன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இந்தி தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் உருவாகி உள்ளது.

நிச்சயதார்த்தம்
ஏப்ரல் மாதம் வெளியாகி இருக்க வேண்டிய இந்தப் படம் லாக்டவுன் காரணமாகத் தள்ளி போயிருக்கிறது. நடிகர் ராணா - மிஹீகா திருமணத்தை டிசம்பர் மாதத்துக்குள் நடத்த முடிவு செய்துள்ளதாக ராணாவின் தந்தை, தயாரிப்பாளர் சுரேஷ் பாபு தெரிவித்து இருந்தார். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில நாட்களுக்கு முன் ராமநாயுடு ஸ்டூடியோவில் நடந்தது.

ஆகஸ்ட்டில் திருமணம்
இந்நிலையில் இவர்கள் திருமணம் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியானது. அந்த தேதியில்தான் தனது திருமணம் நடக்க இருக்கிறது என்று நடிகர் ராணா உறுதிப்படுத்தி உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: நான் அடுத்தக்கட்டத்துக்கு செல்கிறேன் என நினைக்கிறேன். இது, திருமணம் செய்து கொள்ள வேண்டிய நேரம். என் வருங்கால மனைவி மிஹீகா என் வீட்டில் இருந்து 3 கி.மீ தூரத்தில் இருக்கிறார்.

அழகான தருணம்
நாங்கள் அருகிலேயே இருக்கிறோம். விஷயங்கள் சரியாக நடக்கும்போது நான் அதுபற்றி கேள்வி கேட்பதில்லை. மிஹீகா அழகானவர். ஆகஸ்ட் 8 ஆம் தேதி எங்கள் கல்யாணம் நடக்கிறது. அவரைத் திருமணம் செய்து கொள்வது என் வாழ்க்கையின் சிறப்பான நேரம். இது அழகான தருணமாக இருக்கிறது' என்று கூறியுள்ளார் நடிகர் ராணா.


Click it and Unblock the Notifications











