சிமா விருது விழாவில் த்ரிஷாவை வைத்த கண் வாங்காமல் பார்த்த ராணா
சென்னை: மலேசியாவில் நடைபெற்ற சிமா விருது விழாவில் நடிகர் ராணா த்ரிஷாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாராம்.
நடிக்க வந்து 10 ஆண்டுகளை கடந்தும் த்ரிஷா இன்னும் சிக்கென்று உள்ளார். அதனால் சீனியர்கள் தவிர்த்து இளம் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடித்த பிறகே திருமணம் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அவரும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக பல காமலாக பேசப்படுகிறது.

ஹைதராபாத்
அண்மையில் ஹைதராபாத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் த்ரிஷாவும், ராணாவும் கைகோர்த்து கலந்து கொண்டனர் என்று செய்திகள் வெளியாகின.

சிமா விருது
மலேசியாவில் நடந்த சிமா விருது விழாவில் த்ரிஷாவும், ராணாவும் கலந்து கொண்டனர். விழாவில் மேடையில் இருந்தாலும், வேறு எங்கு இருந்தாலும் ராணாவின் கண்கள் த்ரிஷா மீது தான் இருந்ததாம்.

சென்னை
நிகழ்ச்சி தொகுப்பாளரான சிவா ராணாவிடம் உங்களுக்கு சென்னையை எந்த அளவுக்கு தெரியும் என்று கேட்டுள்ளார்.

த்ரிஷா வீடு
சென்னையில் தனக்கு நன்கு தெரிந்த ஒரே இடம் என்றால் அது த்ரிஷாவின் வீடு தான் என்று ராணா தெரிவித்துள்ளார்.

ராணா
ராணா த்ரிஷாவின் மீது உள்ள காதலை சொல்லாமல் சொல்லிய போதும் த்ரிஷா இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

2013
2013ம் ஆண்டு துபாயில் சிமா விருது விழா நடந்தபோது த்ரிஷாவும், ராணாவும் மிகவும் நெருக்கமாக இருந்தது பற்றி பல செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











