பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகும் பாகுபலி நடிகர்.. தீயாய் பரவும் தகவல்!

சென்னை: தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை பாகுபலி நடிகர் தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளிலும் நடைபெற்று வருகிறது.

தமிழில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்களை நிறைவு செய்துள்ளது. இதில் நான்கு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார்.

மோகன் லால்

மோகன் லால்

இதேபோல் மலையாளத்தில் இதுவரை 3 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. மூன்று சீசன்களையுமே நடிகர் மோகன் லால் தொகுத்து வழங்கினார். கொரோனா பெருந்தொற்று காரணமாக மூன்றாவது சீசன் இடையிலேயே நிறுத்தப்பட்டது.

நடிகர் கிச்சா சுதீப்

நடிகர் கிச்சா சுதீப்

கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி 8 சீசன்களை எட்டியுள்ளது. இந்த 8 சீசன்களையும் நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கினார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்களை நிறைவு செய்துள்ளது.

மூன்று நடிகர்கள்

மூன்று நடிகர்கள்

இதில் முதல் சீசனை நடிகர் ஜூனியர் என்டிஆரும், இரண்டாவது சீசனை நடிகர் நானியும் தொகுத்து வழங்கினர். மூன்று மற்றும் நான்காவது சீசனை நடிகர் நாகர்ஜூனா தொகுத்து வழங்கி வந்தார்.

Recommended Video

100 கோடி ரூபாய் வசூலை குவித்த விஜய் சேதுபதி படம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
தொகுப்பாளர் யார்?

தொகுப்பாளர் யார்?

இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தெலுங்கு பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார் என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

நடிகர் ராணா

நடிகர் ராணா

அதாவது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை நடிகர் ராணா டகுபதி தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது. கடந்த சீசன்களை தொகுத்து வழங்கிய நாகர்ஜூனா ஏற்கனவே ஒப்புக்கொண்ட திரைப்படங்களின் படப்பிடிப்புகள் காரணமாக இந்த சீசனை தொகுத்து வழங்க முடியாது என தகவல் வெளியாகியுள்ளது.

நம்பர் 1 யாரி

நம்பர் 1 யாரி

பாகுபலி படத்தில் பல்வாள் தேவனாக நடித்தார் ராணா டகுபதி. இதன் மூலம் நாடு முழுவதும் பிரபலமான ராணா, இதற்கு முன்பு ராணா 'நம்பர் 1 யாரி' என்ற டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X