குடும்பம் மொத்தமும் ஹேப்பி.. நடிகர் ராணா - மிஹீகா திருமணம் எப்போது? அவர் தந்தை வெளியிட்ட தகவல்!
ஐதராபாத்: நடிகர் ராணாவின் திருமணம் எப்போது என்பது பற்றி அவர் தந்தை தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழில், அஜித்தின் ஆரம்பம், பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்திருக்கும் ராணா, பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம், இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.
இந்தி படங்களிலும் நடித்து வரும் இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான, எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

சினிமா குடும்பம்
இப்போது பிரபு சாலமன் இயக்கும் காடன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இந்தி தமிழ், தெலுங்கில் உருவாகி உள்ளது. ஏப்ரல் மாதம் வெளியாகி இருக்க வேண்டிய இந்தப் படம் லாக்டவுன் காரணமாக தள்ளி போயிருக்கிறது. இதையடுத்து சில தெலுங்கு படங்களில் நடித்து வரும் ராணா, தெலுங்கில் பிரபலமான சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர்.

நடிகைகள் கிசுகிசு
இவரது தாத்தா ராமநாயுடு, தனது சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மூலம், 150 படங்களுக்கு மேல் தயாரித்து கின்னஸில் இடம்பிடித்தவர். இவரது தந்தை சுரேஷ்பாபு பிரபல தயாரிப்பாளர். சித்தப்பா, பிரபல தெலுங்கு ஹீரோ வெங்கடேஷ். நாகார்ஜுனா உட்பட சில திரைபிரபலங்கள் இவரது உறவினர்கள். நடிகர் ராணா, நடிகை த்ரிஷா, ஸ்ரேயா உட்பட சில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டவர்.

நிகழ்ச்சி மேலாண்மை
இவர், மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில், தனது காதலை அவர் ஏற்றுக் கொண்டதாக ட்விட்டரில் அறிவித்திருந்தார், ராணா. அவரது புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா, சொந்தமாக நிகழ்ச்சி மேலாண்மை, ஆடை வடிவமைப்பு நிறுவனம் நடத்துகிறார். மாடலிங் தொழிலும் செய்கிறார்.

சுரேஷ் பாபு
இதையடுத்து ராணாவுக்கு நடிகர்கள் ஆர்யா, பிரபாஸ், சிரஞ்சீவி, நடிகைகள் சோனம் கபூர், ஸ்ருதிஹாசன், தமன்னா உட்பட பல நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் எப்போது நடக்கும் என்று ராணாவின் தந்தை, தயாரிப்பாளர் சுரேஷ் பாபு தெரிவித்துள்ளார். 'இந்த கடுமையான காலகட்டத்தில், நாங்கள் கொண்டாட காரணம் இருக்கிறது. முழு குடும்பமும் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

டிசம்பர் மாதம்
அவர்கள் நீண்டகாலமாக ஒருவருக்கொருவர் தெரிந்திருக்கிறார்கள். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். திருமணத்தை இந்த வருடமே நடத்த முடிவு செய்திருக்கிறோம். டிசம்பரில் நடத்துவது பற்றி யோசித்து வருகிறோம். அதற்கு முன்பாகக் கூட நடக்கக் கூடும். இப்போது திருமண திட்டத்தில் பிசியாகத் தொடங்கிவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











