நோயுடன் போராடி ஹீரோவாக மீண்டு வந்தேன்...ராணா ஓபன் டாக்

ஐதராபாத் : தெலுங்கு நடிகர் ராணா டகுபதி தற்போது 'ஹாதி மேரா ஷாதி' என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் அவர் தீவிர இதய மற்றும் சிறுநீரக பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது ராணா இதனை கண்கலங்கி தெரிவித்தார். அப்போது அவர் வாழ்க்கை ஃபாஸ்டா ஃபார்வர்டாக சென்று கொண்டிருந்தது. அதனால் பாஸ் பட்டன் வந்து விட்டது. உங்கள் இதயத்தை கவனிக்காமல் ரத்த அழுத்ததுடன் வைத்திருந்தால், சிறுநீரக பாதிப்பிற்கு ஆளாக நேரிடும் என்றார்.

தான் இருதய மற்றும் சிறுநீரக பாதிப்புடன் எவ்வாறு போராடி நடித்தேன் என சமீபத்தில் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறி இருந்தார். ராணாவிற்கு பக்கவாதம் ஏற்பட 70 சதவீதமும், மரணம் ஏற்பட 30 சதவீதமும் வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் கூறி உள்ளனர்.

படங்களால் மீண்டேன்

படங்களால் மீண்டேன்

பேட்டியில் அவர் கூறுகையில், எனது உடல் ரீதியான பிரச்னைகளை எதிர்கொண்டு, ஹீரோவாக வெளி வர எனது படங்கள் தான் எனக்கு உதவின. அந்த சமயத்தில் எனக்காக காத்திருந்து, வாய்ப்பு வழங்கிய பிரபு சாருக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் மகிழ்ச்சி.

ரீல் உலகம் ரியலை மாற்றி விட்டது

ரீல் உலகம் ரியலை மாற்றி விட்டது

நான் எனது நோயின் பாதிப்பில் இருந்து மனரீதியாக மீண்டு வர காடுகளுக்கு மிகப் பெரிய பங்குண்டு. ரீல் உலகத்தில் நிறைய சந்தோஷங்கள் உள்ளன. ரியல் உலகில் என்ன நடந்தாலும் அது பற்றி ரீல் உலகம் கவலை கொள்வதில்லை.

சமூக வலைதளங்களில் பரவிய தகவல்

சமூக வலைதளங்களில் பரவிய தகவல்

நீங்கள் செட்டில் இருந்தால், நீங்கள் நல்லபடியாக இருப்பதாக உணர்வீர்கள். அதைத் தான் படங்களும் எனக்கு செய்துள்ளன என நினைக்கிறேன் என்றார்.

கடந்த ஆண்டு, ராணாவின் உடல்நிலை பற்றிய தகவலும், அவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள போவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அப்போது இது பற்றிய பேசிய ராணா, இது பற்றி விளக்கம் அளித்து தான் ஓய்ந்து போய் விட்டதாக கூறினார்.

திருமணத்தை அறிவித்த ராணா

திருமணத்தை அறிவித்த ராணா


தான் நல்லபடியாக, ஆரோக்கியமாக இருப்பதாக கூறினார். ஆனால் அதன் பிறகு யாரும் எதிர்பாராத வகையில், மிஹீகா பஜாஜ் உடன் காதல் ஏற்பட்டு, திருமணம் பற்றி அறிவித்தார். தொழிலதிபரான மிஹீகாவுடன் ஐதராபாத்தில் கடந்த ஓராண்டாக ராணா வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X