பாகுபலி வில்லனை கஷ்டப்படுத்திய ஹிப் ஹாப் ஆதி.. என்ன செஞ்சார் தெரியுமா?
ஐதராபாத்: விஷாலின் ஆக்ஷன் படத்தில் இடம்பெற்றுள்ள லைட்ஸ், கேமரா ஆக்ஷன் பாடலின் தெலுங்கு வெர்ஷனில் பாகுபலி வில்லன் நடிகரான ராணா டகுபதியை, ஹிப் ஹாப் ஆதி பாட வைத்துள்ளார்.
படங்களில் எத்தனையோ கஷ்டமான ஸ்டன்ட் ஆக்ஷன்களை செய்துள்ள ராணா டகுபதியை இதுவரைக்கும் இப்படி யாரும் கஷ்டப்படுத்தியிருக்க மாட்டாங்கன்னு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரைப்படம் வரும் நவம்பர் 15ம் தேதி திரைக்கு வருகிறது.

விஜய்சேதுபதியுடன் போட்டி
விஷாலின் ஆக்ஷன் திரைப்படம் தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் படத்துடன் போட்டி போடுகிறது. வரும் நவம்பர் 15ம் தேதி இரு பெரும் படங்களும் ரிலீஸ் ஆகின்றன. தீபாவளிக்கு வெளியான பிகில் மற்றும் கைதி திரைப்படங்கள் 3 வாரங்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், வரும் வாரம் அடுத்த இரண்டு பெரிய படங்கள் ரிலீசாக உள்ளன.

மரணத்தை பார்த்தேன்
சுந்தர். சி இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஆக்ஷன் படம், பெயரை போலவே ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் எடுக்கப்பட்டுள்ளதாம். ஆக்ஷன் படத்திற்காக ஒரு ஸ்டன்ட் செய்யும் போது தான் மரணத்தை நேரில் பார்த்ததை போல் உணர்ந்ததாக நடிகர் விஷால் சமீபத்தில் நடந்த பிரஸ் மீட்டில் கூறினார்.
நாயகிகளும் சும்மா இல்லை
பெரும்பாலும், தமிழ் சினிமாவில் சும்மா பாடலுக்கு மட்டும் நாயகிகள் வந்து செல்வது போல இல்லாமல், தமன்னா மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகிய இரு நாயகிகளும், இந்த படத்தில் ஹீரோ விஷாலுக்கு இணையாக ஸ்டன்ட் காட்சிகளில் நடித்துள்ளனராம். நிச்சயம் இந்த படம் ஸ்டன்ட் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இருக்கும் என இயக்குநர் சுந்தர். சி கூறியுள்ளார்.

எவ்வளவு பட்ஜெட்
விஷால் படங்களிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு 55 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆக்ஷன் படம் ஹாலிவுட் தரத்திற்கு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் பாலிவுட் வில்லனான கபிர் சிங் துஹான் நடித்துள்ளார். விஷாலின் ஆக்ஷன் திரைப்படம் நிச்சயம் பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியைடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகுபலி வில்லன்
பாகுபலி படத்தில் வில்லனகா நடித்த டோலிவுட் ஹீரோ ராணா டகுபதி, ஆக்ஷன் படத்தில் இடம்பெற்றுள்ள லைட்ஸ் கேமரா ஆக்ஷன் பாடலின் தெலுங்கு வெர்ஷனுக்காக முதன்முறையாக ‘ராப்' பாடியுள்ளார். ஹிப் ஹாப் ஆதி மற்றும் ராணா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இன்னும் 5 நாட்களில் ஆக்ஷன் படம் திரைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











