'கிட்னி செயலிழப்பு, இதய பிரச்னை.. அது உண்மைதான்..' சமந்தாவிடம் கண்ணீரோடு ஒப்புக்கொண்ட பிரபல ஹீரோ!

By

சென்னை: கடந்த ஆண்டு தனது உடல்நிலை பாதிக்கப்பட்டது உண்மைதான் என்று கண்ணீர் விட்டபடி நடிகர் ராணா ஒப்புக்கொண்டுள்ளார்.

தமிழில் ஆரம்பம், பெங்களூர் நாட்கள், இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா உட்பட பல படங்களில் நடித்துள்ளவர், தெலுங்கு நடிகர் ராணா.

ராஜமவுலியின் பாகுபலியில் வில்லனாக மிரட்டியதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

காதல் மலர்ந்தது

காதல் மலர்ந்தது

ராணாவுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இவர்கள் திருமணத்துக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி இவர்கள் திருமணம் நடந்தது. நடிகர் ராணாவுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் இதற்காக அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் செய்திகள் வெளியாயின. அவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் கூறப்பட்டது.

மெலிந்த தேகம்

மெலிந்த தேகம்

அவர் அமெரிக்காவில் இருந்து வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் அவர் மெலிந்த தேகத்துடன் காணப்பட்டார். இதனால் அந்தச் செய்தி வைரலானது. ஆனால், தனது உடல்நிலைப் பற்றி வந்த செய்திகளை அவர் மறுத்திருந்தார். அது சாதாரண பிபி பிரச்சனை என்றும் கூறியிருந்தார்.

கண்ணீர் விட்டபடி

கண்ணீர் விட்டபடி

அவர் குடும்பத்தினரும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், நடிகை சமந்தா நடத்தும் சாம் ஜாம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராணா, அதில் தனது கடந்த கால உடல்நல குறைவு பற்றி கண்ணீர்விட்டபடி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

நேரடி மரணம்

நேரடி மரணம்

அவர் கூறும்போது, ' இதயத்தை சுற்றியுள்ள பகுதியில் கால்சியம் அதிகளவில் படர்ந்து இருந்தது. சிறுநீரகங்கள் செயலிழந்தன. இதனால், ஸ்டிரோக் அல்லது ரத்த இழப்பு ஏற்பட 70 சதவிகித வாய்ப்பு இருப்பதாகவும் 30 சதவிகிதம் நேரடி மரணம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றும் என்னிடம் சொன்னார்கள்' என்று கூறினார்.

கடினமான பாறை

கடினமான பாறை

இதையடுத்து நடிகை சமந்தா, உங்களை சுற்றி ரசிகர்கள் இருக்கிறார்கள். நீங்கள் கடினமான பாறை போன்றவர். அதை நான் எனது கண்களுக்கு முன்னால் பார்த்திருக்கிறேன். அதனால்தான் எனக்கு சூப்பர் ஹீரோவாக நீங்கள் இருக்கிறீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X