twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகையை கல்யாணம் பண்ணணும்னு நினைச்சதே இல்லை.. காதலில் விழுந்த கதை சொல்லும் ராணா!

    By
    |

    சென்னை: நடிகர் ராணா, தான் காதலில் விழுந்தது எப்படி என்பதை இப்போது தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Rana Daggubati First ever Interview • And She Said YES | Miheeka Bajaj, Lakshmi Manchu

    அஜித்தின் ஆரம்பம், பெங்களூர் நாட்கள் உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் தெலுங்கு நடிகர் ராணா, பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம், இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.

    இந்தி படங்களிலும் நடித்து வரும் இவர், இப்போது பிரபு சாலமன் இயக்கும் காடன் படத்தில் நடித்துள்ளார்.

    இப்படி ஆடுறாங்க.. ஆனாலும் இந்த டிரெஸ் எப்படி நிக்குது.. திடீரென வைரலாகும் ஸ்ருதியின் வீடியோ!இப்படி ஆடுறாங்க.. ஆனாலும் இந்த டிரெஸ் எப்படி நிக்குது.. திடீரென வைரலாகும் ஸ்ருதியின் வீடியோ!

    சினிமா குடும்பம்

    சினிமா குடும்பம்

    இந்த படம் இந்தி தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் உருவாகி உள்ளது. ஏப்ரல் மாதம் வெளியாகி இருக்க வேண்டிய இந்தப் படம் லாக்டவுன் காரணமாகத் தள்ளி போயிருக்கிறது. சில தெலுங்கு படங்களில் நடித்து வரும் ராணா, பிரபலமான சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தந்தை சுரேஷ்பாபு, 'சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

    மிஹீகா பஜாஜ்

    மிஹீகா பஜாஜ்

    த்ரிஷா உட்பட சில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகர் ராணா, இப்போது மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்தார். அவர் தனது காதலை ஏற்றுக் கொண்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் அறிவித்திருந்தார், ராணா. அவரது புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். ஐதராபாத்தில் வளர்ந்த இன்டீரியர் டிசைனரான மிஹீகா பஜாஜ், ட்யூ ட்ராப் டிசைன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

    டிசம்பரில் திருமணம்

    டிசம்பரில் திருமணம்

    ஈவென்ட் மேனேஜ்மென்ட், ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனத்தின் மூலம் செய்து வருகிறார் மிஹீகா. தனது காதலை அறிவித்த ராணாவுக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்தனர். இவர்கள் திருமணத்தை டிசம்பர் மாதத்துக்குள் நடத்த முடிவு செய்துள்ளதாக ராணாவின் தந்தை, தயாரிப்பாளர் சுரேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

    நிச்சயதார்த்தம்

    நிச்சயதார்த்தம்

    இந்நிலையில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. இதையடுத்து, தனது காதல் கதையை தெரிவித்துள்ளார் ராணா. அவர் கூறியிருப்பதாவது: மிஹீகா, ஐதராபாத்தில் வளர்ந்தவர். நாங்கள் வசிக்கும் பகுதிக்கு அடுத்து இருக்கிறார். அவர் தெலுங்கு பேசுவார். ஆனால் சரளமாகப் பேச முடியாது.

    திரைத்துறை

    திரைத்துறை

    எங்கள் இருவரின் உலகமும் ஒன்றுதான். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அவருக்கு என் குடும்பத்தினருடன் நட்பு உண்டு. அவரது மும்பை நண்பர்கள் வட்டம் எனக்கு தெரியும். திரைத்துறையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. அது பற்றிய எண்ணம் எனக்கு இல்லை.

    காதலில் விழுந்தேன்

    காதலில் விழுந்தேன்

    நான் அவளை சந்தித்தேன். விரும்பினேன். அவ்வளவுதான். காதலில் விழுந்தேன். கொரோனா வைரஸ் காலத்தில் திருமணத்தை பிரமாண்டமாக நடத்துவீர்களா? என்று கேட்கிறார்கள். உலகத்தின் சூழ்நிலையைப் பொறுத்தது அது. என் திருமணத்துக்கு இப்படியொரு விசித்திரமான நேரத்தை தேர்வு செய்திருக்கிறேன் என்றார்.

    English summary
    Rana Daggubati has shared how he met and proposed to Miheeka Bajaj. The actor says he chose a weird time to tie the knot.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X