சூப்பர் ஜோடி.. அவர் உன்னை ரொம்ப நல்லா பார்த்துப்பாரு.. ராணாவின் காதலிக்கு பாலிவுட் நடிகை வாழ்த்து!
ஹைதராபாத்: காதலி தனக்கு யெஸ் சொல்லிட்டாங்க என நேற்று சமூக வலைதளங்களை திக்கு முக்காட செய்தார் நம்ம ராணா டகுபதி.
Recommended Video
யாருப்பா நம்ம ராணா டகுபதியோட அந்த புதிய லவ்வர் என நெட்டிசன்கள் அவரை கூகுளில் அலசோ அலசுன்னு அலசி தேட ஆரம்பிச்சுட்டாங்க..
இன்னொரு பக்கம் ராணாவுக்கு ஓகே சொன்ன மிஹீகாவின் நெருங்கிய தோழியான நம்ம பாலிவுட் நடிகை சோனம் கபூர், தனது தோழிக்கு அருமையான வாழ்த்து மடலை இன்ஸ்டாகிராமில் அனுப்பியுள்ளார்.

கிரீன் சிக்னல்
நடிகை திரிஷாவுடனான காதல் பிரேக்கப்புக்கு வந்த பிறகு, சிங்கிளாகவே இருந்து வந்தார் 35 வயதாகும் நடிகர் ராணா. பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகரித்துள்ள நிலையில், ராணாவின் காதலுக்கு யெஸ் சொல்லி கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார் மிஹீகா பஜாஜ்.

யார் இந்த மிஹீகா பஜாஜ்?
இந்த அறிவிப்பை நடிகர் ராணா டகுபதி நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக போட்டோவுடன் வெளியிட்ட நிலையில், யார் இந்த மிஹீகா பஜாஜ் என பலரும் ஆவலோடு தேட ஆரம்பித்து வருகின்றனர். இன்டீரியர் டிசைன் செய்வதிலும், பிரபலங்களின் பிரம்மாண்ட திருமணங்களை டிசைன் செய்வதிலும் கில்லாடியாம் இந்த மிஹீகா பஜாஜ். டியூ டிராப் டிசைன்ஸ் எனும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

சோனம் கபூரின் தோழி
நடிகர் தனுஷ் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான ராஞ்சனா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை சோனம் கபூரின் நெருங்கிய தோழி தான், ராணாவின் வருங்கால மனைவி மிஹீகா பஜாஜ். ராணாவுக்கு ஆர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்து கூறி வரும் நிலையில், சோனம் கபூர் மிஹீகாவுக்கு வாழ்த்துக் கூறியுள்ளார்.

நல்லா பார்த்துப்பாரு
பாகுபலி படத்தில் பல்வாள் தேவனாக நடித்து அசத்திய ராணா டகுபதி பாலிவுட்டிலும் ரொம்பவே ஃபேமஸ். இந்நிலையில், தனது தோழிக்கு வாழ்த்து சொன்ன நடிகை சோனம் கபூர், நல்ல செலக்ஷன் என்றும், ராணா உன்னை ரொம்ப நல்லா பார்த்துப்பாரு என்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

எப்போ கல்யாணம்
ரகசியமாக இருந்து வந்த இவர்களின் காதல் விவகாரம், தற்போது அதிரடியாக வெளியாகி இருக்கிறது. இதற்கு காரணமே இந்த லாக்டவுன் பிரச்சனைகள் முடிந்த உடனே இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதற்கான அறிகுறி தான் தான் டோலிவுட் மீடியாக்கள் செய்திகளை பரப்பி வருகின்றன. விரைவில் ராணாவே அதிகாரப்பூர்வமாக அதைப் பற்றி அறிவிப்பார் என தெரிகிறது. அப்போ பிரபாஸ் கல்யாணம் பாஸ்?


Click it and Unblock the Notifications











