வேட்டையன் வழக்கமான ரஜினிகாந்த் படமாக இருக்காது.. ராணா டகுபதி இப்படி கதையை லீக் பண்ணிட்டாரே?

சென்னை: ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் திரைப்படம் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அந்த படம் குறித்து அதில் நடித்து வரும் ராணா டகுபதி சமீபத்திய பேட்டியில் ஏகப்பட்ட அப்டேட்களை கொடுத்துள்ளார்.

ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் மும்பை ஷெட்யூல் சமீபத்தில் நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட்டின் பிக் பி அமிதாப் பச்சன் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வேறலெவலில் டிரெண்டானது.

Rana Daggubati says Vettaiyan is not a usual Rajinikanth movie it s totally different

ஜெயிலர் படத்தை போலவே ரஜினிகாந்தை வைத்து மல்டி ஸ்டார் படமாக இந்த வேட்டையன் படத்தை த.செ. ஞானவேல் உருவாக்கி வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் கதை குறித்த தகவல்களை ராணா டகுபதி கூறியுள்ளார்.

போட்டி போடும் நடிகர்கள்: ரஜினிகாந்த் 73 வயதிலும் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் நிலையில், அவரது படத்தில் நடிக்க அழைத்தால் நடிகர்கள் உடனடியாக ஓகே செய்து போட்டி போட்டு நடித்து வருகின்றனர். ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில் என பலர் நடித்த நிலையில், வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் ஃபாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

தலைவர் 171: அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கூலி படத்தில் ராகவா லாரன்ஸ், ரன்வீர் சிங், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், நிச்சயம் பல முன்னணி நட்சத்திரங்கள் கூலி படத்தில் இணைவார்கள் என்பது உறுதியாக தெரிகிறது.

ராணா ரகுபதி: ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணா டகுபதி அந்த படத்திற்கு பிறகு உலக அளவில் பிரபலமாகிவிட்டார். நாகார்ஜுனாவின் உறவினரான ராணா ரகுபதி லீடர் படத்தின் மூலம் 2010ம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானார். தமிழில் அஜித்தின் ஆரம்பம் படத்தில் நண்பனாக நடித்து அறிமுகமான இவர் பாகுபலி படத்தின் மூலம் பிரபலமானார். காடன் படத்தில் நடித்திருந்த இவர் அடுத்ததாக ரஜினிகாந்த் உடன் இணைந்து வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.

வழக்கமான படம் இல்லை: காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் இடையே நடக்கும் போராட்டமாக இந்த படம் பல உண்மை சம்பவங்களின் அடிப்படையாக கொண்டு அதிகம் ரிசர்ச் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் அதை விட பெரிய கதையை மையமாக கொண்டு இந்த படத்தை உருவாக்கி வருகிறார். இப்படியொரு படத்தை ரஜினிகாந்த் தேர்வு செய்ததே பெரிய விஷயம் என்றும் இது வழக்கமான ரஜினிகாந்த் படமாக இருக்காது என ராணா டகுபதி கூறியுள்ளார்.

கொடுத்து வச்சிருக்கணும்: ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், மஞ்சு வாரியர் என ஏகப்பட்ட பிரபலங்களுடன் நடிப்பதற்கே கொடுத்து வச்சிருக்கணும். படம் ரொம்பவே நல்லா வந்திருக்கு, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் காத்துக் கொண்டிருக்கிறது என ராணா டகுபதி படத்தின் கதை குறித்த பல விஷயங்களை வெளிப்படையாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X