டிஆர் கார்த்திகேயனை சந்தித்த ராணா: டிஆர்கே யாருன்னு தெரியும்ல?
பெங்களூர்: தெலுங்கு நடிகர் ராணா தனது சித்தப்பா வெங்கடேஷுடன் சேர்ந்து முன்னாள் சிபிஐ அதிகாரி டிஆர் கார்த்திகேயனை சந்தித்து பேசியுள்ளார்.
பாகுபலி 2 படம் ரூ. 1,500 கோடி வசூல் செய்த மகிழ்ச்சியில் உள்ளார் பல்லாள தேவனாக நடித்த ராணா. அவர் ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கத்தில் ஆஸ்போடா - தி ஹ்யூமன் பாம்ப்' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.

ராணா
படத்தில் ராணா சிபிஐ அதிகாரி டிஆர் கார்த்திகேயனாக நடிக்கிறார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை விசாரித்த சிறப்பு குழுவின் தலைவராக இருந்தவர் கார்த்திகேயன். மேலும் இது குறித்து கார்த்திகேயன் புத்தகமும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கடேஷ்
5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் ராணா டிஆர் கார்த்திகேயனை சந்தித்து பேசியுள்ளார். ராணாவுடன் அவரின் சித்தப்பாவும், நடிகருமான வெங்கடேஷும் இருந்துள்ளார். இந்த படத்தில் வெங்கடேஷ் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.

கார்த்திகேயன்
ராணா முன்பும் ஒரு முறை கார்த்திகேயனை சந்தித்து படத்தின் திரைக்கதையை கொடுத்து அவரின் கருத்தை கேட்டுள்ளார். இந்நிலையில் அவரை மீண்டும் சந்தித்துள்ளார்.

கதாபாத்திரம்
ஒரு படத்தில் நடித்தால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட வேண்டும் என்று நினைப்பவர் ராணா. அதனால் தான் கார்த்திகேயனை சந்தித்து பேசி வருகிறார்.


Click it and Unblock the Notifications











