மாப்பிள்ளை ரெடி.. சமந்தா விஷ் பண்ணியாச்சு.. களைகட்டும் நடிகர் ராணாவின் திருமண வைபவம்!
ஹைதராபாத்: டோலிவுட் நடிகர் ராணா டகுபதியின் திருமணம் இன்று நடைபெறுகிறது.
Recommended Video
திருமணத்திற்காக ரெடியான ராணா, அதன் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ரெடி என ட்வீட் போட்டுள்ளார்.
நடிகை சமந்தா, தனது உறவினரும் சக நடிகரான ராணாவின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ராணா – மிஹீகா திருமணம்
பாகுபலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பிரபல தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் அவரது தோழி மிஹீகாவுக்கும் இன்று திருமணம் நடைபெறுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக குறைவான குடும்ப ஆட்களை மட்டுமே வைத்து இந்த திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மாப்பிள்ளை ரெடி
நடிகர் ராணா தனது அப்பா சுரேஷ் பாபு மற்றும் உறவினரும் நடிகருமான வெங்டேஷ் உடன் நின்றபடி போஸ் கொடுத்து, திருமணத்துக்கு மாப்பிள்ளை ரெடி என பதிவிட்டுள்ளார். நடிகர் ராணாவின் இந்த புகைப்படத்தை பார்த்த பிரபலங்களும், அவரது ரசிகர்களும், அவருக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது கொண்டாட்ட நேரம்
நடிகையும் ராணாவின் உறவினருமான சமந்தா, அவருடன் மெஹந்தி விழாவில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, இது கொண்டாட்டத்திற்கான நேரம், ராக்ஸ்டார் ராணா இது உங்களுக்கு பிக் டே என பதிவிட்டு, தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். முன்னதாக ராணாவின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியிலும், தனது கணவர் நாக சைதன்யாவுடன் சமந்தா கலந்து கொண்டு இருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே.

திருமண உடை
கொரோனா பரவல் காரணமாக திருமண விழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெறும் 30 பேர் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொள்கின்றனர். நடிகர் ராணா மற்றும் மிஹீகாவின் திருமண உடையை பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனாமிகா கான் பாரம்பர்ய உடையாக உருவாக்கி உள்ளார்.

வாழ்த்து மழை
ராணா - மிஹீகா திருமண வைபவம் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் தாலி கட்டிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும் என தெரிகிறது. ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து மழைகளை தூவி வருகின்றனர். சமூக விலகல் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த திருமணம் நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











