ராணாவுடன் ஸ்ரேயா, த்ரிஷா, பிப்ஸ், சமீரா: அடுத்து யாரோ?

By Siva

சென்னை: தெலுங்கு நடிகர் ராணா டக்குபாத்தியுடன் சேர்த்து கிசுகிசுக்கப்படும் லேட்டஸ்ட் நடிகை சமீரா ரெட்டியாகும்.

தெலுங்கு நடிகர் ராணா டக்குபாத்தியையும், கிசுகிசுக்களையும் பிரிக்க முடியாது போன்று. அவருடன் காதல் என்று இதுவரை பல நடிகைகளின் பெயர்கள் வெளிவந்துள்ளன. தயவு செய்து எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கிசுகிசு எழுதாதீர்கள். ஏதாவது என்றால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் நானே சொல்கிறேன் என்று அவர் சொல்வதை யாரும் கேட்பதாகவே தெரியவில்லை.

ஸ்ரேயாவுடன் டேட்டிங்

ஸ்ரேயாவுடன் டேட்டிங்

ஒரு காலத்தில் டோலிவுட்டில் கொடி கட்டிப் பறந்த ஸ்ரேயாவை ராணா டேட் செய்தார் என்று செய்திகள் வெளியாகின. அப்போது டோலிவுட்டில் அவர்கள் காதல் பற்றி தான் பேச்சாகக் கிடந்ததாம்.

த்ரிஷாவுடன் காதல்ல்ல்

த்ரிஷாவுடன் காதல்ல்ல்

ஸ்ரேயாவை அடுத்து ராணா வாழ்வில் வந்தவர் த்ரிஷா. த்ரிஷாவுக்கும் ராணாவுக்கும் காதல் என்றும், திருமணம் என்றும் செய்தி வந்தாலும் அதை அவர்கள் ஒப்புக்கொள்ள தயாராக இல்லை.

பிபாஷா பாசுவுடன் பியார்

பிபாஷா பாசுவுடன் பியார்

ராணா டோலிவுட்டில் இருந்து பாலிவுட் போனார். அப்போது அங்கிருக்கும் கவர்ச்சிப் புயல் பிபாஷா பாசுவுக்கும் அவருக்கும் காதல் தீ பத்திக்கொண்டது என்று கிசுகிசுக்கப்பட்டது. பிபாஷா வந்ததால் த்ரிஷா கடுப்பாகிவிட்டார் என்றெல்லாம் கூறப்பட்டது.

சமீரா ரெட்டியுடன் காதலாமே?

சமீரா ரெட்டியுடன் காதலாமே?

ராணாவுடன் சேர்த்து தற்போது கிசுகிசுக்கப்படும் நடிகை சமீரா ரெட்டி, சமீராவிடம் கேட்டால் ச்சே, ச்சே எனக்கும் ராணாவுக்கும் ஒரே தேதியில் பிறந்தநாள் என்பதைத் தவிர எங்களுக்குள் வேறு எதுவும் கிடையாது என்று பட்டென்று சொல்லிவிட்டார்.

எவர்லாஸ்ட்டிங் த்ரிஷா

எவர்லாஸ்ட்டிங் த்ரிஷா

ராணாவுடன் சேர்த்து பல நடிகைகள் கிசுகிசுக்கப்பட்டாலும் பல ஆண்டுகளாக அவருடன் சேர்த்து பேசப்படுபவர் என்னமோ த்ரிஷா தான். தனக்கும் ராணாவுக்கும் காதல் என்று ஊடகங்கள் செய்தி வெளியிடுவதை தயவு செய்து நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று த்ரிஷா கேட்டுக் கொண்டாலும் உண்மையை அறியாமல் மக்கள் ஓயமாட்டார்கள் போலும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X