கார் விபத்தில் சிக்கி.. காயமின்றி தப்பினாரா நடிகர் ராணாவின் தம்பி.. குடும்பம் அவசர விளக்கம்!

By

சென்னை: நடிகர் ராணாவின் தம்பி கார் விபத்தில் சிக்கியதாகவும் காயம் ஏதுமின்றி தப்பிவிட்டதாகவும் தெலுங்கு சினிமாவில் இன்று பரபரப்பு தகவல் வெளியானது.

பிரபல தெலுங்கு நடிகர் ராணா. இவர், தமிழில், அஜித்தின் ஆரம்பம், பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார்.

பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம், இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார். இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

கொரோனா காரணமாக

கொரோனா காரணமாக

கவுதம் வாசுதேவ் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த ராணா, இப்போது பிரபு சாலமன் இயக்கும் காடன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கில் உருவாகி உள்ளது. கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள இந்தப் படம் ஒடிடி-யில் வெளியாகப் போவதாக தகவல் வெளியாகி இருந்தன.

சினிமா குடும்பம்

சினிமா குடும்பம்

நடிகர் ராணா, தெலுங்கில் பிரபலமான சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தாத்தா ராமநாயுடு, தனது சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் மூலம், 150 படங்களுக்கு மேல் தயாரித்து கின்னஸில் இடம்பிடித்தவர். இவரது தந்தை சுரேஷ்பாபு பிரபல தயாரிப்பாளர். சித்தப்பா, பிரபல தெலுங்கு ஹீரோ வெங்கடேஷ். நடிகர் நாகார்ஜுனா உட்பட சில திரைபிரபலங்கள் இவரது உறவினர்கள்.

மிஹீகா பஜாஜ்

மிஹீகா பஜாஜ்

நடிகர் ராணா, மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து கடந்த 8 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் எளிமையாக நடந்தது. இதில் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்கள் திருமணம் முடிந்து நான்கைந்து நாட்களுக்குள், ராணாவின் தம்பி அபிராம் விபத்தில் சிக்கியதாக இன்று செய்தி பரவியது.

கார் விபத்து

கார் விபத்து

அபிராம் விரைவில் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். இவர் ஐதராபாத்தில் உள்ள மணிகொண்டாவில் இன்று நடந்த கார் விபத்தில் சிக்கியதாகவும் கார் பயங்கரமாக சேதமடைந்த நிலையில், அவர் எந்த காயமும் இல்லாமல் தப்பியதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் செய்தி பரவியது. இது பரபரப்பானது.

நம்ப வேண்டாம்

நம்ப வேண்டாம்

இந்நிலையில், நடிகர் ராணாவின் குடும்பம் இந்தச் செய்தியை மறுத்துள்ளது. இதுபற்றி ராணாவின் குடும்பத்தினர், ஆபிராம் எந்த விபத்திலும் சிக்கவில்லை என்றும் எங்கள் குடும்பத்து காரும் விபத்தைச் சந்திக்கவில்லை என்றும் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் மக்கள் இந்தச் செய்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X