நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டுமே அனுமதி.. நடிகர் ராணா- மிஹீகா பஜாஜ் திருமண தேதி இதுதானாமே?

By

சென்னை: பிரபல நடிகர் ராணா டக்குபதி - மஹீகா பஜாஜ் திருமணத் தேதி வெளியாகியுள்ளது.

Recommended Video

Rana Daggubati First ever Interview • And She Said YES | Miheeka Bajaj, Lakshmi Manchu

அஜித்தின் ஆரம்பம், பெங்களூர் நாட்கள் உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்திருப்பவர் ராணா டகுபதி.

தெலுங்கு நடிகரான இவர், பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம், இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.

லாக்டவுன்

லாக்டவுன்

இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். இப்போது பிரபு சாலமன் இயக்கும் காடன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இந்தி தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் உருவாகி உள்ளது. ஏப்ரல் மாதம் வெளியாகி இருக்க வேண்டிய இந்தப் படம் லாக்டவுன் காரணமாகத் தள்ளி போயிருக்கிறது. அடுத்து சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

மிஹீகா பஜாஜ்

மிஹீகா பஜாஜ்

த்ரிஷா உட்பட சில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகர் ராணா, இப்போது மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்தார். அவர் தனது காதலை ஏற்றுக் கொண்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் அறிவித்திருந்தார், ராணா. அவரது புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். ஐதராபாத்தில் வளர்ந்த இன்டீரியர் டிசைனரான மிஹீகா பஜாஜ், ட்யூ ட்ராப் டிசைன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

தனது காதலை அறிவித்த ராணாவுக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்தனர். இவர்கள் திருமணத்தை டிசம்பர் மாதத்துக்குள் நடத்த முடிவு செய்துள்ளதாக ராணாவின் தந்தை, தயாரிப்பாளர் சுரேஷ் பாபு தெரிவித்து இருந்தார். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 10 நாட்களுக்கு முன் ராமநாயுடு ஸ்டூடியோவில் நடந்தது.

ஆகஸ்ட்டில் திருமணம்

ஆகஸ்ட்டில் திருமணம்

இந்நிலையில் இவர்கள் திருமணம் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ராணாவின் தந்தை சுரேஷ்பாபு உறுதிப்படுத்தி உள்ளார். நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டுமே திருமணத்தில் கலந்துகொள்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், எங்கு திருமணம் நடக்க இருக்கிறது என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X