கோடியில் ஒருவன் தெலுங்கு ட்ரைலரை வெளியிடும் நடிகர் ராணா... டைட்டில் வேற லெவல் போங்க !
சென்னை : இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள கோடியில் ஒருவன் திரைப்படம் மிக விரைவில் ரிலீசாக உள்ளது.
விஜய் ஆண்டனிக்கு தெலுங்கிலும் மிகப்பெரிய வரவேற்பு உள்ளதால் பக்கா ஆக்ஷன் கதை களத்தில் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள கோடியில் ஒருவன் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.
தெலுங்கு ரீமேக்கிற்கு "விஜயராகவன்" என மாஸான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலரை நடிகர் ராணா இன்று ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிடுகிறார்.

துள்ளலான இசை
அலட்டிக்கொள்ளாத நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்து கொண்டுள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி. துள்ளலான இசைக்கு பெயர் போன விஜய் ஆண்டனி இப்பொழுது படங்களில் ஹீரோவாக நடித்து தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார். இவரின் திரைப்படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . எனவே மற்ற மொழிகளிலும் விஜய் ஆண்டனியின் திரைப்படங்கள் அமோகமாக வியாபாரமாகிறது.

பிச்சைக்காரன்
இந்த வகையில் இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் தெலுங்கில் பிச்சை காடு என்ற பெயரில் வெளியிடப்பட்டு தமிழை விடவும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்தது அதிலிருந்து விஜய் ஆண்டனி திரைப்படங்களுக்கு என்றாலே தனி மவுசு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. பிச்சைகாரன் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.

ஐஏஎஸ் அதிகாரியாக
அந்த வகையில் இப்பொழுது ஆள்,மெட்ரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் கோடியில் ஒருவன் படத்தில் முதல் முறையாக ஐஏஎஸ் அதிகாரியாக விஜய்சேதுபதி நடித்துள்ளார். விறுவிறுப்பான கதை களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி இணைய தளத்தில் சக்கை போடு போட்டது. விஜய் ஆண்டனி இதுவரை நடித்திருந்த திரைப்படங்களில் பெரும்பாலும் சாதுவான கதாபாத்திரங்களில் வருவார் ஆனால் இந்த படத்தில் ரவுடிகளை அடித்து துவைத்து துவம்சம் செய்து ஆக்சன் ஹீரோவாக மாறியுள்ளார்.

டியூஷன் மாஸ்டர்
மேலும் இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்திருக்க படம் முழுவதும் ரொமான்டிக் காட்சிகள் நிரம்பி வழிகிறது. ஒருபுறம் ஐஏஎஸ் அதிகாரி மறுபுறம் ஹவுசிங் போர்டில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுப்பது என கலக்கி இருக்கும் விஜய் ஆண்டனியின் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்க இப்படத்தை தெலுங்கு மொழியிலும் படக்குழு வெளியிட முடிவு செய்துள்ளது.

ராணா வெளியிடுகிறார்
தமிழில் கோடியில் ஒருவன் என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தெலுங்கில் "விஜயராகவன்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் பெயர் விஜயராகவன் என இருக்கலாம் என தெரிகிறது. தமிழில் ஏற்கனவே கோடியில் ஒருவன் ட்ரைலர் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இப்பொழுது விஜயராகவன் ட்ரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. இதனை தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள ராணா தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிடுகிறார். தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றது போல கோடியில் ஒருவன் பக்கா கமர்ஷியல் திரைப்படமாக உருவாகி இருப்பதால் பிச்சைக்காரன் போல இந்த திரைப்படமும் தெலுங்கில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











