த்ரிஷாவும், ராணாவும் மீண்டும் காதலிக்கிறார்களா?: எல்லாம் 'அந்த ட்வீட்' தான் காரணம்
Recommended Video

சென்னை: ஒரேயொரு ட்வீட்டால் ராணாவும், த்ரிஷாவும் காதலை புதுப்பித்துவிட்டதாக பேச்சு கிளம்பியிருக்கிறது.
நடிகை த்ரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் காதலித்ததாக பல காலமாக பேசப்பட்டது. த்ரிஷாவுக்கு திருமணம் நிச்சயமானபோது அடங்கிய பேச்சு திருமணம் நின்றதும் மீண்டும் துவங்கியது.
இந்நிலையில் தற்போது மீண்டும் அந்த பேச்சு கிளம்பியுள்ளது.

த்ரிஷா
ஆர்யா தனக்கும், நடிகை சயீஷாவுக்கும் திருமணம் என்று ட்வீட் செய்ததை பார்த்த ராணா மச்சான் வாழ்த்துக்கள் என்று கமெண்ட் போட்டார். அவர் கமெண்ட் போட்ட கையோடு த்ரிஷாவும் ஆர்யாவை வாழ்த்தினார்.
ராணா
ராணாவின் கமெண்ட்டை பார்த்த ஆர்யாவோ, நன்றி மச்சான், உன் கல்யாணத்திற்காக காத்திருக்கிறேன் என்று பதில் அளித்தார். இதை பார்த்தவர்களோ த்ரிஷாவும், ராணாவும் மீண்டும் காதலிப்பதாக பேசத் துவங்கிவிட்டனர்.
நீக்கம்
காதல் புதுப்பிக்கப்பட்டதை பற்றிய பேச்சு கிளம்பியதும் த்ரிஷா ஆர்யாவை வாழ்த்தி போட்ட ட்வீட்டை நீக்கிவிட்டார். இதனால் சும்மா பேசியவர்களுக்கு ஆதாரம் கிடைத்தது போன்றாகிவிட்டது.

நம்பிக்கை இல்லை
நானும், த்ரிஷாவும் நண்பர்களாக இருந்தோமே தவிர எங்களுக்கு இடையே காதல் இல்லை என்று ராணா தெரிவித்தார். ஆனால் அவர் பேச்சை நம்ப யாரும் தயாராக இல்லை.


Click it and Unblock the Notifications











