சைஃப் அலி கானை ராவணனாக ஏற்க முடியாது.. ராணா தான் கச்சிதமாக இருப்பார்.. கிளம்பியது புது சிக்கல்?

சென்னை: பிரபாஸ் நடிப்பில் உருவாகவுள்ள 'ஆதிபுருஷ்' படத்தில் சைஃப் அலி கான் ராவணனாக நடிப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

Recommended Video

SINGER VELMURUGAN | நம்ம மக்கள் நல்ல மனசுக்கு எதுவும் ஆகாது | V-CONNECT | FILMIBEAT TAMIL

தான்ஹாஜி படத்தை இயக்கிய இயக்குநர் ஓம் ராவத், ராமாயண கதையை 'ஆதிபுருஷ்' என்ற டைட்டிலில் பிரம்மாண்டமாக எடுக்க முன் வந்துள்ளார்.

நடிகர் பிரபாஸ் ராமர் வேடத்தில் நடிக்க உள்ள நிலையில், தான்ஹாஜி படத்தில் வில்லனாக நடித்த சைஃப் அலி கானே இந்த படத்தில் லங்கேஷ்வரன் ராவணனாக நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு நேற்று வெளியானது.

இந்தியாவின் இதிகாசங்கள்

இந்தியாவின் இதிகாசங்கள்

மகாபாரதம் மற்றும் ராமாயணத்திற்கு இணையான இதிகாசங்களே இந்த உலகில் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தனித்துவமும் பல சிறப்பு அம்சங்களும் கொண்ட கதைகள் அவை. மகா விஷ்ணுவின் கடவுள் அவதாரமான ராமரும், கிருஷ்ணரும் மனிதர்களாக வாழ்ந்து அரக்கர்களை வீழ்த்தி தர்மத்தை நிலை நாட்டிய நிகழ்வுகளே இந்த இதிகாசங்களாக எழுதப்பட்டது என்ற நம்பிக்கை உள்ளது.

ராமாயணம்

ராமாயணம்

சமீபத்தில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்ட ராமாயணம் தொடர் 70 மில்லியன் இம்பிரஷன்களை பெற்று, கேம் ஆஃப் த்ரோன்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் தொடர்களின் சாதனைகளை முறியடித்து உலக சாதனை படைத்தது. இந்நிலையில், ராமாயணம் கதையை படமாக்க இயக்குநர் ஓம் ராவத் முடிவு செய்து, ‘ஆதிபுருஷ்' என்ற டைட்டிலில் படமெடுக்க முன் வந்துள்ளார்.

ராமராக பிரபாஸ்

ராமராக பிரபாஸ்

பாகுபலி படத்தில், ராஜா வேடத்தில் நடித்து கலக்கிய நடிகர் பிரபாஸுக்கு உலக அளவில் ரசிகர்களும் மார்க்கெட்டும் உயர்ந்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்த தான்ஹாஜி பட இயக்குநர், நடிகர் பிரபாஸை ராமர் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்துள்ளார். இந்த படம் இந்தி மற்றும் தெலுங்கில் உருவாக்கப்பட உள்ளது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் உலகளவில் டப் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராவணனாக பாலிவுட் நடிகர்

ராவணனாக பாலிவுட் நடிகர்

ராமராக டோலிவுட் நடிகர் பிரபாஸ் நடிக்கவுள்ள நிலையில், இலங்கை அரசன் ராவணனாக பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் நடிக்க உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான தான்ஹாஜி படத்தில் சைஃப் அலி கான் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

கிளம்பிய சர்ச்சை

கிளம்பிய சர்ச்சை

லங்கேஷ்வரன் ராவணனாக பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் நடிக்க உள்ள செய்தியுடன் கூடவே சர்ச்சையும் கிளம்பி இருக்கிறது. பாலிவுட் நடிகரான சைஃப் அலி கான் எப்படி சிவ பக்தனான ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க அனுமதிப்பது என்று சில நெட்டிசன்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளனர். மத ரீதியான பிரச்சனைகளும் எழுந்து வருகின்றன.

ராணா தான் ராவணன்

ராணா தான் ராவணன்

மேலும், பாகுபலி படத்தில் பல்வாள்தேவனாக நடித்த நடிகர் ராணா தான் ராவணன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவார் எனக் கூறி, அவரை ராவணனாக சித்தரித்து உருவாக்கப்பட்டுள்ள போஸ்டர்களையும் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். இது குறித்து படக்குழு ஆலோசனை செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும், சீதையாக யார் நடிக்கப் போகிறார்? அனுமன் யார் என்ற எதிர்பார்ப்புகள் தான் ரசிகர்கள் மனங்களை ஆட்கொண்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X