கோலாகலமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம்.. ராம்சரண், அல்லு அர்ஜுன், சமந்தா கலந்து கொண்டனர்!

ஹைதராபாத்: பாகுபலியில் பல்வாள்தேவனாக மிரட்டிய நடிகர் ராணா டகுபதி, தன்னுடைய தேவசேனாவை நேற்று கரம் பிடித்தார்.

Recommended Video

Rana Daggubati First ever Interview • And She Said YES | Miheeka Bajaj, Lakshmi Manchu

நட்சத்திர குடும்ப திருமணம் என்பதால், திருமணத்திற்கு வந்த 30 பேரில் பலரும் திரை நட்சத்திரங்களாகவே மின்னினர்.

டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ராம்சரண், அல்லு அர்ஜுன், நாக சைதன்யா மற்றும் சமந்தா உள்ளிட்டோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

தாலி கட்டியாச்சு

தாலி கட்டியாச்சு

கொரோனா பரவல் காரணமாக இந்தியளவில் திரை நட்சத்திரங்களையும், ரசிகர்களையும் அழைத்து நடத்தி இருக்க வேண்டிய ராணா - மிஹீகா திருமணம், குறைந்த ஆட்களை கொண்டு, கோலாகலமாக களைகட்டியது. மிஹீகா பஜாஜுக்கு தாலி கட்டிய ராணா அவருக்கு மோதிரம் போடும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

க்ரூப் போட்டோவில் சமந்தா

க்ரூப் போட்டோவில் சமந்தா

ராணாவின் திருமண க்ரூப் போட்டோ வெளியாகி செம வைரலாகி வருகிறது. நடிகை சமந்தா வெளியிட்ட அந்த புகைப்படத்தில், ஏதோ சின்ன பொண்ணு போல கீழ் வரிசையில் அழகாக அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். நடிகர் வெங்கடேஷ், சமந்தாவின் கணவரும் நடிகருமான நாக சைதன்யா உள்ளிட்டோர் அந்த க்ரூப் போட்டோவில் இடம்பிடித்துள்ளனர்.

மாஸ்க்குடன் ராம்சரண்

மாஸ்க்குடன் ராம்சரண்

ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து வரும் நடிகர் ராம் சரண், தனது உறவினரான ராணா டகுபதியின் திருமண விழாவிற்கு மாஸ்க் அணிந்து பிரவேசித்துள்ளார். அவரை பார்த்தவுடன் கட்டித் தழுவும் ராணாவின் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. சிறுவயதில் இருந்தே இருவரும் நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனைவியுடன் ராம்சரண்

மனைவியுடன் ராம்சரண்

திருமண விழாவுக்கு தனது மனைவி உபசனா காமினேனியுடன் வருகை தந்த நடிகர் ராம்சரண், ராணா டகுபதி - மிஹீகா பஜாஜ் தம்பதியினருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த எடுத்துக் கொண்ட புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது. ராம்சரண் மற்றும் அவரது மனைவி இருவரும் வெள்ளை நிறத்தில் மின்னும் ஆடையில் திருமணத்தில் பங்கேற்றனர்.

அல்லு அர்ஜுனும் ஆஜர்

அல்லு அர்ஜுனும் ஆஜர்

டோலிவுட்டின் ஸ்டைலிஷ் சூப்பர்ஸ்டாரான நடிகர் அல்லு அர்ஜுனும் ராணா - மிஹீகா திருமணத்துக்கு ஆஜர் ஆனார். அல்லு அர்ஜுன் காரில் வந்து இறங்குவது முதல், போட்டோவுக்கு போஸ் கொடுப்பது என பல்வேறு புகைப்படங்களை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். #RanaMiheekaWedding என்ற ஹாஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

லைவ்ஸ்ட்ரீமிங்கில் பார்த்த நானி

லைவ்ஸ்ட்ரீமிங்கில் பார்த்த நானி

ராஜமெளலி, பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா நானி என பல்வேறு பிரபலங்கள் கொரோனா கட்டுப்பாடு காரணமாக திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அதன் காரணமாக ராணா - மிஹீகா திருமணம் லைவ் ஸ்ட்ரீமிங்காக சில பிரபலங்களுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. நடிகர் நானி விர்ச்சுவல் ரியாலிட்டியில் அந்த திருமணத்தை வீட்டிலேயே இருந்து பார்த்துள்ளார்.

அக்னி சாட்சியாக

அக்னி சாட்சியாக

தொழிலதிபர் மிஹீகா பஜாஜுக்கு நடிகர் ராணா டகுபதி தாலி கட்டிய நிலையில், இருவரும் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து, அக்னி சாட்சியாக வலம் வரும் வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் ராணாவுக்கு திருமணம் ஆன நிலையில், டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என பல ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X