அந்த வயதில் எங்கம்மா 3 புள்ள பெத்துட்டாங்க: வாரிசு நடிகையை விளாசிய 'தலைவி'

By Siva

Recommended Video

ஆலியா பட்டை விளாசிய நடிகை கங்கனா ரனாவத்- வீடியோ

மும்பை: புள்ள பெறும் வயதாகிவிட்டது இன்னும் என்ன இளம் நடிகை என்கிறீர்கள் என ஆலியா பட்டை விளாசியுள்ளார் நடிகை கங்கனா ரனாவத்

ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தால் சிறப்பாக நடித்துக் கொடுப்பார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் என்பது அனைவருக்கும் தெரியும். அதே சமயம் மனதில் பட்டதை படபடவென பேசி பிரபலங்கள் பலரின் விரோதத்தை சம்பாதித்துள்ளார் அவர்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் திரையுலக பிரபலங்களை விளாசியுள்ளார் கங்கனா. அவர் கூறியதாவது,

ரன்பிர் கபூர்

ரன்பிர் கபூர்

ஆலியா பட், ரன்பிர் கபூரை இளம் காதல் ஜோடி என்கிறார்கள். ரன்பிர் கபூருக்கு 37 வயதாகிறது, ஆலியா அண்மையில் தான் தனது 27வது பிறந்தநாளை கொண்டாடினார். 27 வயதில் என் அம்மா 3 பிள்ளைகளை பெற்றுவிட்டார். அப்படி இருக்கும்போது அவர்களை இளம் ஜோடி என்று கூறக் கூடாது.

நாட்டு பிரச்சனை

நாட்டு பிரச்சனை

திரையுலக பிரபலங்களிடம் அவர்களின் செக்ஸ் வாழ்க்கை பற்றி கேட்டால் சந்தோஷமாக பேசுவார்கள். யாருடன் இருக்கிறார்கள் என்பதை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் போடுவார்கள். ஆனால் நாடு பற்றி ஏதாவது கேட்டால் அது என் தனிப்பட்ட விவகாரம் என்பார்களாம்.

மோதல்

மோதல்

நான் ஒன்றும் ஆசைப்பட்டு மற்றவர்களை விளாசவில்லை. என்னிடம் மோதினால் மட்டுமே விளாசுவேன் என்று தெரிவித்துள்ளார் கங்கனா. அவர் பேசியது பாலிவுட் பிரபலங்கள் பலருக்கு பிடிக்கவில்லை.

ஜெயலலிதா

ஜெயலலிதா

கங்கனா இப்படி அனைவரையும் பகைத்துக் கொள்வதால் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காது என்று பிரபல இயக்குநர் தெரிவித்தார். இந்நிலையில் தான் அவர் ரூ. 24 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டு ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவியில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X