»   »  தீயாக பரவிய வாரிசு நடிகர்-நடிகை காதல் செய்தி: காரணம் இயக்குனர்?

தீயாக பரவிய வாரிசு நடிகர்-நடிகை காதல் செய்தி: காரணம் இயக்குனர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரன்பிர் கபூருக்கும், ஆலியா பட்டுக்கும் காதல்!

மும்பை: ரன்பிர் கபூருக்கும், ஆலியா பட்டுக்கும் காதல் என்று வதந்தி பரவ இயக்குனர் அயன் முகர்ஜி தான் காரணம் என்று கூறப்படுகிறது.

அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பிர் கபூர், ஆலியா பட் நடித்து வரும் படம் பிரம்மாஸ்த்ரா. ரன்பிர், ஆலியா முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். ஒரு காலத்தில் ரன்பிர் மீது கிரஷ் இருந்ததாக ஆலியா தெரிவித்தார்.

இந்நிலையில் அவர்கள் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள்.

கிசுகிசு

கிசுகிசு

ரன்பிர் கபூரும், ஆலியா பட்டும் காதலிப்பதாக பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது. இருவரும் ஜோடி போட்டு பல இடங்களுக்கு செல்வதால் இந்த பேச்சு கிளம்பியுள்ளது.

ஆலியா

ஆலியா

ரன்பிர் கபூர் தனது காதலியான கத்ரீனா கைஃபை பிரிந்துவிட்டு சிங்கிளாக உள்ளார். ஆலியாவுக்கும், அவரின் காதலர் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அண்மையில் தான் பிரிந்தனர்.

ஐடியா

ஐடியா

படத்தில் காதலர்களாக நடிக்க வேண்டும் என்றால் நிஜத்தில் நல்ல புரிதல் ஏற்பட வேண்டும். அதனால் நிஜத்தில் இருவரும் சேர்ந்து நேரம் செலவிடுங்கள் என்று இயக்குனர் ரன்பிர், ஆலியாவிடம் தெரிவித்திருக்கிறார். அதனால் தான் அவர்கள் ஜோடியாக ஊர் சுற்றுகிறார்கள்.

கூல்

கூல்

காதல் கிசுகிசுக்கள் குறித்து அறிந்து ரன்பிர் கபூர் டென்ஷனாகியுள்ளாராம். ஆனால் ஆலியாவோ எல்லாவற்றையும் கேட்டும் கேட்காதது போன்று கூலாக இருக்கிறாராம்.

English summary
Brahmastra director Ayan Mukerji is to be blamed for the rumours about Ranbir Kapoor and Alia Bhatt. He asked Ranbir and Alia to spend quality time together so that onscreen chemistry will be good.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil