கல்யாண வயசுதான்... இந்தி சினிமாவின் இளம் காதல் ஜோடிக்கு எப்ப கல்யாணம்? திருமண தேதி கன்பர்மாம்
மும்பை: இந்தி சினிமாவில் இளம் காதல் ஜோடிகளான ஆலியா பட்- ரன்பீர் கபூர் திருமணம் எப்போது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரபல இந்தி பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகள் ஆலியா பட். குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய ஆலியா, கரண் ஜோஹரின் ஸ்டூடன்ட் ஆப் த இயர் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
அடுத்து ஹைவே, டியர் ஜிந்தகி, ராஸி உட்பட பல படங்களில் நடித்தார். 2 ஸ்டேட்ஸ் படத்தில் தமிழ்ப் பெண்ணாக நடித்திருந்தார்.

தீபிகா படுகோன்
இவரும் இந்தி ஹீரோ ரன்பீர் கபூரும் காதலித்து வந்தனர். இவர் பிரபல முன்னாள் ஹீரோ ரிஷி கபூரின் மகன். ரன்பீர் கபூர், பிரபல நடிகை தீபிகா படுகோனை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள இருந்தனர். பின்னர் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு திடீரென்று பிரிந்தனர். இதனால் திருமணம் தடை பட்டது.

கேத்ரினா கைஃப்
இதையடுத்து நடிகை தீபிகா படுகோன், மற்றொரு பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங்கை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் பாலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில் நடிகர் ரன்பீர் கபூர், நடிகை கேத்ரினா கைஃபை காதலித்து வந்ததாகக் கூறப்பட்டது. அந்த காதலும் முறிந்தது.

நடிகை ஆலியா பட்
பின்னர், இளம் ஹீரோயின் ஆலியா பட்-ஐ காதலிக்கத் தொடங்கினார் ரன்பீர் கபூர். இந்நிலையில் இந்த காதலும் உடையும் முன் இவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி இவர்கள் திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடக்க இருப்பதாக பாலிவுட்டில் கூறப்படுகிறது.

பிரம்மாஸ்த்ரா
இவர்கள் இருவரும் பிரம்மாஸ்த்ரா என்ற ஃபேன்டஸி படத்தில் முதன்முறையாக, ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இதில் அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மற்றும் நாகார்ஜுனா, மவுனி ராய், டிம்பிள் உட்பட பலர் நடித்துள்ளனர். அதிக பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. அந்த மாதமே இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications











